நாட்டின் பெயர் இனி "இந்தியா" இல்லை? "பாரத்"? நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு தீர்மானம்?
டெல்லி: நாட்டின் "இந்தியா" என்ற பெயரை "பாரத்" அல்லது "பாரதம்" என மாற்றும் முயற்சியில் மத்திய அரசு பாஜக இறங்கிவிட்டது; நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை மத்திய அரசு கொண்டுவரக் கூடும் என எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. "இந்தியா" என கூட்டணிக்கு பெயர் வைத்தது முதலே மத்தியில் ஆளும் பாஜக அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் "இந்தியா" என உச்சரிப்பதற்கு பதிலாக "பாரதம்" என்ற சொல்லையே மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டியிருப்பதாக அறிவித்தது. செப்டம்பர் 18-ந் தேதி முதல் செப்டம்பர் 22 வரை இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கான செயல் திட்டம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் மத்திய அரசு கூட்டும் இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மசோதா கொண்டுவரப்பட இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. அதாவது லோக்சபா, நாட்டின் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல் நடத்துவது என்பதுதான் மத்திய பாஜக அரசின் திட்டம். இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
இதனிடையே அண்மைக்காலமாக மத்திய அமைச்சர்கள் "பாரதம்" என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். "இந்தியா" என்பதை தவிர்த்தும் வருகின்றனர். தற்போது ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கான அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என இடம்பெற்றுள்ளது. பாஜக எம்பி ஹர்நாத் சிங் என்பவரும் நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்ய கோரி வருகிறார். இதற்கு முன்னர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும் பாரத தேசம் என்றே அழைக்க வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறார்.
இதனால் மத்திய அரசு கூட்டியுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் நாட்டின் பெயரான "இந்தியா" என்பதையே "பாரத்" அல்லது "பாரதம்" என மாற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதோ? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த சர்வாதிகாரப் போக்குக்கு திமுக, காங்கிரஸ் , இடதுசாரிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications