வரி....வட்டி...கிஸ்தி..மன்னர் காலம் தொடங்கி மக்களாட்சி வரை என்னென்ன வரிகள்? ஏன் கட்ட வேண்டும்?
ஒரு மன்னன், மக்களிடம் வரி வாங்கும் முறையைச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் ஒன்று, ‘மலர் ஒன்று தன் வலியை உணராதவாறு வண்டு தேன் எடுப்பதைப் போல மன்னன் செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்துகிறது.
டெல்லி: வரி ஒரு நாட்டின் மிக முக்கிய வருமான ஆதாரம். இந்தியாவிலும் பண்டைய காலத்தில் இருந்து வரி விதிப்பு முறை இருந்து வந்துள்ளது. அர்த்தசாஸ்திரம் மற்றும் மனு ஸ்மிருதி நூல்களில் வரி விதிப்பு முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் இருந்த வரிமுறைகள் குறித்துப் பல செய்திகள் கிடைக்கின்றன. பண்டைய காலத்தில் வரி என்பது பொருள், பணம் மற்றும் உடல் உழைப்பாக மக்களிடமிருந்து பெறப்பட்டது. ஆங்கிலேயர்கள் தாம் அடிமைப்படுத்திய நாடுகளுக்கு என ஒரு புதிய வரிமுறையை அமல்படுத்தினர்.
ஒரு மன்னன், மக்களிடம் வரி வாங்கும் முறையைச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் ஒன்று, 'மலர் ஒன்று தன் வலியை உணராதவாறு வண்டு தேன் எடுப்பதைப் போல மன்னன் செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்துகிறது.
நம்முடைய நாட்டில் எழுதப்பட்டுள்ள பல இலக்கியப் படைப்புகள் வருமானத்தின் ஆறில் ஒரு பாகம் மன்னனுக்கு உரிய வரி என்று குறிப்பிடுகின்றன.

'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தா ரோம்பல் தலை'
எனும் திருக்குறளுக்கான விளக்க உரையில் ஒருவர் தனது மூதாதையர்கள், கடவுளர்கள், விருந்தினர்கள் மற்றும் சுற்றத்தார்கள் ஆகியோருக்கு நான்கு பங்கு போக, தனக்கென ஒரு பங்கு எடுத்துக்கொண்ட பின், ஆறாவது பங்கை மன்னனுக்குச் செலுத்தினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தனிநபரின் வருமானம் ஆறு பங்காகப் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வரிமுறைதான் சங்ககாலம் முதல் விஜயநகரப் பேரரசின் ஆட்சி வரை அமலில் இருந்தது. இதன் பிறகு ஆங்கிலேயர்கள் தாம் அடிமைப்படுத்திய நாடுகளுக்கு என ஒரு புதிய வரிமுறையை அமல்படுத்தினர்.
இந்தியாவில் மவுரியர் ஆட்சிக்காலத்தில் வேளாண்மை உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்துவது, காட்டுப் பொருட்களுக்கு வரி, உலோகங்களுக்கு வரி, உப்பு வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன. அதன் பிறகு சுல்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் கிராஜ் என்று நில வரி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மீது ஜெசியா என்ற வரி விதிக்கப்பட்டு வந்தது.

அக்பர் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக இருந்த ராஜா தோடர்மால் பல்வேறு வரி முறைகளை கொண்டு வந்தார். தற்போதுள்ள வருமான வரி அமைப்பு போல் ஒவ்வொருவரின் வருமானத்தை பொறுத்து வரியை விதிக்கக்கூடிய முறை கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் நம்மை அடிமைப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு வரி முறைகள் கொண்டு வரப்பட்டன.
மகல்வாரி முறை, ரயத்துவாரி முறை, ஜமீன்தாரி முறை என பல்வேறு வரி முறைகளைக் கொண்டு வந்தனர். 1922ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் முதன் முறையாக கொண்டு வரப்பட்டது. வரி பிரிவை கண்காணிப்பதற்கென வரித்துறை அமைப்பு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. பாளையக்காரர்கள், சிறு குறு நில மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டி வந்தனர். கட்டாயம் வரி கட்ட வேண்டும் என்று சொன்ன ஆங்கிலேயரைப் பார்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் பேசிய வசனம் இன்றைக்கும் பலராலும் பேசிக்காட்டப்படுகிறது. "வரி....வட்டி...கிஸ்தி... யாரைக் கேட்கிறாய் வரி! எதற்கு கொடுக்க வேண்டும் கிஸ்தி!எங்களோடு வயலுக்கு வந்தாயா! நாற்று நட்டாயா! களை பறித்தாயா! ஏற்றம் இறைத்து நெடுவயல் பாயக்கண்டாயா!அல்லது அங்கே கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா! மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே! என்று ஆங்கிலேயரைப் பார்த்து கூறுவார் கட்டபொம்மன். உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து மகாத்மா காந்தி அடிகள் தலைமையில் தண்டி யாத்திரை சென்றது பற்றி இன்றைக்கும் பலரும் பாடப்புத்தகங்களில் படிக்கலாம்.
கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட பல மறைமுக வரிகள் எல்லாம் நீக்கப்பட்டு தற்போது இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற வரிமுறை தற்போது புழக்கத்தில் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இன்றைக்கும் வருமானவரி வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வரிகள் பற்றியும் குறிப்பிடுவார்கள். இந்தியாவில் கடந்த 1860ஆம் ஆண்டிலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு வரையிலும் இரவில் தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அப்போது நிதியமைச்சர் மாலை 5 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பிது விடிய விடிய வாசித்துக்கொண்டே இருப்பார். இந்த நடைமுறையை முதன்முதலில் மாற்றியவர் 1999ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா தான். அவர்தான் முதன்முதலில் பட்ஜெட்டை காலை 11மணிக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டுவந்தார். அன்றிலிருந்து இன்று வரையிலும் இந்த நடைமுறையே தொடர்கிறது. வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டுவந்த பட்ஜெட் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதேபோல் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து ரயில்வே பட்ஜெட் தனியாகவே தாக்கல் செய்யப்பட்டு வந்தது, அதவும் 2016ஆம் ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

பட்ஜெட்டில் வரி சீர்திருத்தத்தை கொண்டுவந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தான். இவர் 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தான் வருமான வரி சீர்திருத்தத்தை கொண்டுவந்து மத்திய அரசுக்கு வருமானத்தை அதிகரித்தவர். அதோடு 1994ஆம் ஆண்டில் சேவை வரியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரும் சிதம்பரம் தான். சேவை வரியாக 10.3 சதவிகிதம் விதிக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த ஆண்டாவது வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மாத சம்பளதாரர்கள் கோரிக்கை வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications