டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்..பாராட்டும் உலக நாடுகள்..முன்னேறிய பொருளாதாரம்..நிர்மலா பெருமிதம்

பொருளாதார ரீதியாக இந்தியா 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன், உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரம் இந்தியா என்று குறிப்பிட்டார். பொருளாதார ரீதியாக இந்தியா 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து 5வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

 Union budget 2023: India is a star of hope says Nirmala Sitharaman

7 முக்கிய அம்சங்களை கொண்டதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலா துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். உலக நாடுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உற்று நோக்குவதாக குறிப்பிட்டார். அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 5வது பொருளாதார நாடு இந்தியா என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், பொருளாதார ரீதியாக இந்தியா 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக குறிப்பிட்டார். சிறுதானியங்களை ஊக்குவிக்கவும், விவசாயத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

English summary
Union budget 2023:Nirmala Sitharaman, who delivered the budget speech in Parliament, mentioned that India is the shining star in the global economy. He also proudly mentioned that India has progressed from 10th to 5th place economically.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X