மத்திய பட்ஜெட் 2026: சென்னை - பெங்களூர், ஹைதராபாத் 'புல்லட்' ரயில்! தமிழகத்திற்கு ஜாக்பாட்!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள அவர், இந்த முறை ரயில்வே மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ் ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரயில்வே துறை அறிவிப்புகள் (Railway Highlights):
சென்னைக்கு டபுள் தமாகா: நாடு முழுவதும் மொத்தம் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் (High-Speed Rail) சேவைகள் தொடங்கப்படும். இதில், சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களிலும் அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தென் மாநிலப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
சரக்கு ரயில் பாதை: நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் பிரத்யேக சரக்கு ரயில் பாதை (Exclusive Freight Corridor) அமைக்கப்படும்.
உள்கட்டமைப்பு & நகர வளர்ச்சி:
ரூ.12.2 லட்சம் கோடி: மூலதனச் செலவு (Capital Expenditure) ரூ.12.20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நகரங்கள் மேம்பாடு: 2-ம் நிலை (Tier-2) மற்றும் 3-ம் நிலை (Tier-3) நகரங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்வழித் தடம்: அடுத்த 5 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்திற்காக நாடு முழுவதும் 20 புதிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும். வாரணாசி மற்றும் பாட்னாவில் கப்பல் பழுது பார்க்கும் தளங்கள் அமைக்கப்படும்.
மருத்துவம் & தொழில்நுட்பம்:
பயோ பார்மா: ரூ.10,000 கோடியில் 'பயோ பார்மா சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும்.
நாள்பட்ட நோய்கள்: நீண்ட கால நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ்: மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ரூ.40,000 கோடி பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர்: மிகண்டக்டர் (Semiconductor) உற்பத்திக்குக் கூடுதல் ஊக்கம் அளிக்கப்படும்.
தொழில் துறை:
புதிய 'மெகா ஜவுளிப் பூங்கா' (Mega Textile Park) அமைக்கப்படும்.
சிறுகுறு தொழில்களை (MSME) ஊக்குவிக்க மும்முனைத் திட்டம் மற்றும் காதி கைவினைப் பொருட்களுக்காக 'மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும்.
வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8% முதல் 7.2% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன், இளைஞர்கள் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications