டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிசி பட்டியலில் உட்பிரிவு ஜாதி தொடர்பாக ஆராயும் கமிஷனுக்கான பதவி காலம் நீட்டிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (ஓபிசி- OBC) உட்பிரிவு ஜாதிகளின் பிரச்சனைகளை ஆராயும் கமிஷனுக்கான பதவிக் காலத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி-OBC) என வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த மத்திய அரசுப் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உட் பிரிவுகள் பற்றி ஆராய்வதற்காக 340வது சட்டப் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

விண்வெளி துறையில் தனியார்மயம்- புதிதாக இந்திய தேசிய விண்வெளி மையம் - IN-SPACe : கேபினட் முடிவுவிண்வெளி துறையில் தனியார்மயம்- புதிதாக இந்திய தேசிய விண்வெளி மையம் - IN-SPACe : கேபினட் முடிவு

Union Cabinet apporves extension of tenure of commission for issue of OBC list

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட விரிவான செய்தி அறிக்கை: மத்தியப் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகள் பற்றி ஆராய்வதற்கான ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு - அதாவது 31.1.2021 வரையில் நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் செய்யும் போது, இப்போதைய இதர பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தும், மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டில் பெரிய ஆதாயங்கள் எதுவும் பெறாத நிலையில் இருக்கும் ஓபிசி உட் பிரிவினருக்கு, பயன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஓ.பி.சி.களுக்கான மத்திய பட்டியலில் உள்ள இதுபோன்ற புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தினருக்குப் பயன்தரும் வகையில் இந்த ஆணையம் பரிந்துரைகள் அளிக்கவுள்ளது.

ஆணையத்தின் அலுவலக மற்றும் நிர்வாகம் தொடர்பான செலவுகள் தான் இதற்கு ஆகும். இவற்றை சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத் துறை தொடர்ந்து வழங்கும். ஓ.பி.சி.களுக்கான இடஒதுக்கீட்டில் இப்போதைய திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணிகள், மத்திய அரசு கல்வி நிலைய மாணவர் சேர்க்கையில் பயன்களைப் பெறாதிருக்கும் சாதிகள் / சமுதாயங்களைச் சேர்ந்த அனைவரும் இதனால் பயன் பெறுவார்கள்.

ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான மற்றும் அதன் விசாரணை வரம்புகளை அதிகரிப்பதற்கான உத்தரவுகள், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகு, ஜனாதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவின் மூலமாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்படும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

English summary
The Union Cabinet chaired by the Prime Minister, Shri Narendra Modi has approved the extension of the term of the Commission to examine the issue of Sub-categorization of Other Backward Classes, by 6 months i.e. upto 31.1.2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X