மத்திய பாஜக அரசின் "நிலக்கரி வேட்டை"க்கு ரூ.2,980 கோடி-மத்திய அமைச்சரவை ஒப்புதல்! தப்புமா தமிழ்நாடு?
டெல்லி: மத்திய அரசின் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கண்டறிதல் திட்டத்தை தொடர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ரூ.2,980 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கை: நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கண்டறிதல் தொடர்பான மத்திய திட்டத்தைத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22-ஆம் நிதியாண்டிலிருந்து 2025-26-ஆம் நிதியாண்டு வரை 15-வது நிதி ஆணையத்தின் திட்டப்படி ரூ.2,980 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு இரண்டு விரிவான நிலைகளில் நடத்தப்படுகிறது: (i) பிராந்திய ஆய்வு ஊக்குவிப்பு மற்றும் (ii) கோல் இந்தியா நிறுவன எல்லைக்கு உட்படாத பகுதிகளில் விரிவான ஆய்வு ஆகியவையாகும்.
இந்தத் திட்டத்தின் ஒப்புதல் மூலம் பிராந்திய ஆய்வு ஊக்குவிப்புக்கு ரூ.1650 கோடியும், கோல் இந்தியா நிறுவன (சிஐஎல்) எல்லை அல்லாத பகுதிகளில் விரிவான ஆய்வுக்காக ரூ.1330 கோடியும் ஒதுக்கப்படும். உத்தேசமாக, 1300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிராந்திய ஆய்வின் கீழும், உத்தேசமாக 650 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிவான ஆய்வுத் திட்டத்தின் கீழும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உதவும் வகையில், நிலக்கரி வளங்கள் தொடர்பான ஆதாரங்களை நிரூபிக்கவும் மதிப்பிடவும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு அவசியமானதாகும். இந்த ஆய்வின் மூலம் தயாரிக்கப்படும் புவியியல் அமைப்பு தொடர்பான அறிக்கைகள், புதிய நிலக்கரிச் சுரங்கத் தொகுதிகளை ஏலம் விட பயன்படுத்தப்பட்டு, அதன்பின் ஒதுக்கீடு பெறுபவர்களிடமிருந்து செலவு வசூலிக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தப்புமா தமிழ்நாடு? : அண்மையில் தமிழ்நாட்டின் அரியலூர், தஞ்சாவூர், கடலூர் என காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்க அமைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் காவிரி டெல்டா, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்; இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைத்தால் தமிழ்நாடு பாலைவனமாகும் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒருசேர எதிர்ப்பு குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தருவதற்கு முன்னதாக, காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மாட்டோம்; அத்திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தற்போது நிலக்கரி, பழுப்பு நிலக்கரி திட்டத்தை கண்டறியும் திட்டத்தை தொடர மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பது தமிழ்நாட்டு மக்களிடம் ஒருவித அச்சத்தை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications