டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலத்தடி நீர் மேலாண்மை- இந்தியா-ஆஸ்திரேலியா இடையோன ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Google Oneindia Tamil News

டெல்லி: திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிலத்தடி நீர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையோன ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB), நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிப்பு துறை மற்றும் ஆஸ்திரேலியாவின் நிலத்தடி நீர் மேலாண்மை நிறுவனமான மார்வி பார்ட்னர்ஸ் ஆகியவை இடையே கடந்தாண்டு அக்டோபரில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் எடுத்துக் கூறப்பட்டது. நிலத்தடி நீர் உட்பட நீர்வளங்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் கல்வியில் ஒத்துழைப்புடன் செயல்படவும், வேளாண்மை, நகர்ப்புறம், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்கான நீர்பாதுகாப்பு பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Union Cabinet approves MoU between India-Aus. for sustainable groundwater management

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு 520 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத் தொகுப்பு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி வரும் 2023-24 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு தீனதயாள் அந்தியோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

பள்ளி கல்வியை மேம்படுத்த ரூ.5718 கோடி மதிப்பிலான உலக வங்கி திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்பள்ளி கல்வியை மேம்படுத்த ரூ.5718 கோடி மதிப்பிலான உலக வங்கி திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்திடம் (என்எம்டிசி) இருந்து, நகர்னர் எஃகு ஆலையை (NSP) பிரிக்கவும், அதில் உள்ள மத்திய அரசின் பங்குகளை முழுமையாக விற்கவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது.

இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Union Cabinet was apprised of a Memorandum of Understanding (MoU) signed between Central Ground Water Board (CGWB), Department of Water Resources, River Development and Ganga rejuvenation, India and Managing Aquifer Recharge and Sustaining Groundwater use through village-level intervention (MARVI) PARTNERS, Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X