Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பேசியிருந்தார். இந்நிலையில், இதனை தொடர்ந்து தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதியளிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை அனுப்பி வைத்திருந்தனர். இப்படி இருக்கையில் இக்குழு ஆய்வை இறுதி செய்து அதை மத்திய அமைச்சரவையில் சமர்பித்துள்ளது. இதற்கு இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

one nation one election bjp

இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3வது ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைந்திருப்பதை கொண்டாடடும் விதமாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

பரிந்துரைகள் என்ன?: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 தினங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்திருந்தது. இதை அமல்படுத்த எந்தக் காலக்கெடுவையும் இக்குழு நிர்ணயிக்கவில்லை.

இதை அமல்படுத்த ஒரு செயலாக்கக் குழுவை அமைக்க வேண்டும் என்று இக்குழு கூறியிருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்திருந்தது.

மோடி பேசியது என்ன?: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. அனால், இந்த ஆண்டு இதற்கான விவாதங்கள் அவ்வளவாக எழவில்லை. இப்படி இருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சுதந்திர தின உரையில், இது குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார்.

அதாவது, "தேசத்தின் முன்னேற்றத்துக்கு செங்கோட்டையில் இருந்து அரசியல் கட்சிகள் உறுதியேற்க வேண்டும். தேசத்தின் வளங்கள் சாமானிய மனிதனுக்காகப் பயன்படுவதையும் அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' என்ற கனவை நனவாக்க நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது" என்று கூறியிருந்தார்.

அமித்ஷா: இதனை தொடர்ந்து, பாஜக ஆட்சி முடிவதற்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக அமித்ஷாவின் பேச்சும் இருந்தது. நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்திருந்த அமித்ஷா, "பாஜக ஆட்சி முடிவதற்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவர தீர்மானித்திருக்கிறோம்" என்று பேசியிருந்தார். இதனையடுத்து தற்போது இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு: இந்த திட்டத்தை தொடக்கத்திலிருந்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. கடந்த 1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஆந்திரப்பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.

தேர்தலுக்கு ஆகும் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல்களில் கவனம் செலுத்துவது குறைந்து, ஆட்சியிலும் நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்த முடியும் என்பன போன்ற வாதங்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றன. இந்த வாதங்களில் நியாயம் இருந்தாலும், இதுவரை இதற்கான உறுதியான சான்றுகள் இல்லை. உண்மையில், தேர்தல் நடத்துவதை வெறும் செலவுப் பிரச்சினையாகச் சுருக்கிவிட முடியாது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போது சில மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+