Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஃஎப்பில் பணம் எடுக்க போறீங்களா? அட்வான்ஸ் தொகை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா? செம குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இபிஃஎப்ஓ-வில் அவசர தேவைகளுக்காக பணம் எடுக்கும் முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி பிஃஎப்பில் ஒரே நேரத்தில் ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் இபிஃஎப்ஓ (EPFO or Employees Provident Fund Organisation) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாத சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். அதேபோல் பணியாற்றும் நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகை என்பது வழங்கப்படும்.

epfo pf


இந்த 2 தொகையும் சேர்த்து இபிஃஎப்ஓ பணமாக ஊழியர்கள் கணக்கில் சேமிக்கப்படும். ஊழியர்களின் ஓய்வு காலத்துக்காக இந்த பணம் சேமிக்கப்படும். இதற்கு தற்போது 8.25 சதவீதம் வரை வட்டி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் இந்த இபிஃஎப்ஓ தொகையை நாம் முன்கூட்டியே எடுத்து பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது
கல்வி, திருமணம், வீடு கட்டுதல், மருத்துவ செலவு உள்ளிட்ட தேவைகளுக்கு பணியாளர்கள் தங்களின் பிஃஎப்பில் இருந்து பணத்தை அட்வான்ஸாக பெற முடியும்.

இதற்கு ஒவ்வொருவரும் தங்களின் EPFO இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு அனைத்து விஷயங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அதிகபட்சம் 15 நாட்களுக்கும் பிஃஎப் அட்வான்ஸ் தொகை என்பது அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.

நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு.. இரவோடு இரவாக போன மகிழ்ச்சி செய்தி.. பிஎப் கணக்கில் ஜாக்பாட்


இந்த பிஃஎப் அட்வான்ஸ் தொகையின் உச்சவரம்பு என்பது ரூ.50 ஆயிரமாக மத்திய அரசு நிர்ணயம் செய்திருந்தது. தற்போது இந்த உச்சவரம்பு என்பது ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருமணம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு ஒரே நேரத்தில் ஊழியர்கள் தங்களின் பிஃஎப் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் வரை அட்வான்ஸாக பெற விண்ணப்பம் செய்ய முடியும்.

அதேபோல் பிஃஎப் திட்டத்தில் புதிதாக இணையும் பணியாளர்கள் இதற்கு முன்பு பணியில் சேர்ந்த 6 மாதத்துக்கு பிறகு தான் பிஃஎப் பணத்தை அட்வான்ஸாக பெற முடியும். ஆனால் தற்போது புதிய பணியாளர்கள் 6 மாதம் நிறைவு செய்யாவிட்டாலும் கூட பிஃஎப் மூலம் முன்பணத்தை பெற முடியும் என விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முதல் 100 நாள் பயணத்தில் பல்வேறு சிறப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிஃஎப் திட்டத்தில் மக்களுக்கு எளிமையான சேவைகள் வழங்க பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் தான் மேற்கூறிய 2 அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறுகையில், ‛‛மக்கள் அடிக்கடி மருத்துவம் மற்றும் திருமணத்துக்கு பிஃஎப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் ஒரே நேரத்தில் பணத்தை எடுக்கும் வரம்பை ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+