டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயோலாஜிக்கல் இ வேக்சின் உட்பட.. 74 கோடி வேக்சின் டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர்.. விரைவில் டெலிவரி!

Google Oneindia Tamil News

டெல்லி: பயோலாஜிக்கல் இ வேக்சின் உட்பட மொத்தம் 74 கோடி வேக்சின் டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர் செய்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றி உள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் மூட்டை மூட்டையாக சிக்கிய 'பாட்டில்கள்' இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் செய்த பகீர்! டிஐஜி அதிரடிதஞ்சையில் மூட்டை மூட்டையாக சிக்கிய 'பாட்டில்கள்' இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் செய்த பகீர்! டிஐஜி அதிரடி

இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நிதி ஆயோக் உறுப்பினரும், கொரோனா தடுப்பு வல்லுநர் குழுவின் தலைவருமான விகே பால் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

முன்னுரிமை

முன்னுரிமை

இது தொடர்பாக பேட்டி அளித்த விகே பால், ஒன்றிய அரசுகள் மாநிலங்களுக்கு வேக்சின் அளிப்பதற்கு முன்பாகவே அது தொடர்பான விவரங்களை முன்கூட்டியே மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும். மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்கும் வேக்சினை 18+ வயது கொண்டவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கொடுக்கலாம். மாநில அரசு இதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

 மாவட்டம்

மாவட்டம்

மாநில அரசுகள் தங்களின் மாவட்ட நிர்வாகங்களுக்கு வேக்சின் வழங்குவது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதற்கான முறையான திட்டமிடலை செய்ய வேண்டும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த வேக்சின்களில் 25% தனியாருக்கு வழங்கப்படும். 13க்கும் அதிகமான மாநில அரசுகள் எங்களிடம் இந்த கோரிக்கையை வைத்தன.

வேக்சின்

வேக்சின்

மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சமமாக வேக்சின் கிடைப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். பெரிய, சிறிய தனியார் மருத்துவமனைகளுக்கு வேக்சின் கிடைக்க வகை செய்ய வேண்டும். வேக்சின் உற்பத்தியாளர்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் வேக்சின் விலை முன்கூட்டியே முடிவு செய்யப்படும். காசு கொடுத்து வேக்சின் போட்டுக்கொள்ள நினைக்கும் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளலாம் .

 கோவிட்ஷீல்ட்

கோவிட்ஷீல்ட்

25 கோடி கோவிட்ஷீல்ட், 19 கோடி கோவாக்சின் மத்திய அரசு மூலம் ஆர்டர் செயயப்பட்டது. இதற்காக 30% முன்தொகை மத்திய அரசு மூலம் கொடுக்கப்பட்டது. இந்த 44 கோடி வேக்சின் டோஸ் வரும் டிசம்பர் 2021 வரை கிடைக்கும். பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனங்களுக்கு இதற்கான நேரடி ஆர்டர் கொடுக்கப்பட்டது.

பயோலாஜிக்கல் இ வேக்சின்

பயோலாஜிக்கல் இ வேக்சின்

இது போக கூடுதலாக 30 கோடி டோஸ் பயோலாஜிக்கல் இ வேக்சின் மத்திய அரசு மூலம் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுவிட்டது. இந்த வேக்சின் விரைவில் வந்து சேரும். இந்த வேக்சின் வரும் செப்டம்பர் மாதம் கிடைக்கும். செப்டம்பர் மாதம் மாநிலங்களுக்கு இந்த வேக்சின் பிரித்து அளிக்கப்படும், என்று விகே பால் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Union government orders 74 Crore vaccine does including Bio E Vaccine says Niti Aayog member V K Paul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X