என்னாச்சு.. இந்தியை "கைவிட்ட" மத்திய அரசு.. 2 விருதுகள் இனி இல்லை.. அமித்ஷா அமைச்சக ஆர்டர்!
டெல்லி: இந்தி மொழி ஆளுமைக்காக வழங்கப்படும் 2 விருதுகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
சிறந்த இந்தி எழுத்தாளர்களுக்காக "ஷிக்சா புரஸ்கார்" என்ற பெயரில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்தி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருது அப்போது அறிமுகம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. ஆண்டுதோறும் 5 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

அதேபோல், 'ஹிந்திதார் பாஷி ஹிந்தி லேகாக் புரஸ்கார்' என்ற பெயரிலும் மத்திய அரசு ஒரு விருதை வழங்கி வந்தது. இந்தி பேசாத பகுதிகளை சேர்ந்தவர்களை இந்தியில் எழுத ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதை மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த விருதை பெறும் எழுத்தாளருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இந்த நிலையில் இவ்விரண்டு விருதுகளை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பை தற்போது மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.
அமித்ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த 2 விருதுகளை கைவிடுவதாக அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மே 17 ஆம் தேதி வெளியான சுற்றறிக்கையில், 'ஷிக்சா புரஸ்கார் மற்றும் ஹிந்திதார் பாஷி ஹிந்தி லேகாக் புரஸ்கார்' ஆகிய விருதுகளை கைவிட மத்திய உயகல்வித் துறையே முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், "ஷிக்சா புரஸ்கார் விருது இந்தியை தாய்மொழியாக கொண்ட மற்றும் இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்காத எழுத்தாளர்கள் அசலாக இந்தியில் எழுதிய புத்தகங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கல்விக் கொள்கை, பயிற்றுவித்தல் முறை, சமூக அறிவியல், சட்டம், அரசியல், தத்துவவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், அரசியல் கருத்து, கலாச்சாரம், தொலைதொடர்பு, தார்மீக அறிவியல், மருத்துவ அறிவியல் அல்லது வேறு துறை சார்ந்த எழுதப்படும் புத்தகங்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு துறையிலும் இருக்கும் மத்திய இந்தி இயக்குநரகம், இந்த விருதுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களை பரிசீலித்து வெற்றியாளர்களை தேர்வு செய்யும்." என்று குறிப்பிட்டு இருந்தது. அதே நேரம் இந்த விருதுகளை மத்திய அரசு கைவிடுவது ஏன்? மத்திய உள்துறை அமைச்சகம் இதனை கைவிட சொன்னது ஏன்? என்ற எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை.
-
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications