பாகிஸ்தானை இந்தியா தாக்கியது எப்படி? உண்மையில் நடந்தது என்ன? இன்று காலை மத்திய அரசு விளக்கம்
டெல்லி: பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தரப்பட்டது தொடர்பாக வெள்ளிக்கிழமை காலை விளக்கம் அளிக்க உள்ளது மத்திய அரசு.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி, அதை தடுத்தது எப்படி? இந்தியாவின் பதிலடி தாக்குதலில் நடந்தது என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். பாகிஸ்தான் உள்ளே நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்திய பாதுகாப்பு படையினர் சார்பாக விளக்கம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வியாழன் இரவு மற்றும் வெள்ளி அதிகாலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.

பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடித்தது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
இன்னொரு பக்கம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அஜித் தோவல் உள்ளிட்டோருடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
முப்பை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். பாகிஸ்தான் தாக்குதலையடுத்து மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். எல்லையில் நிலவும் சூழல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்தே பாகிஸ்தானின் லாகூர் மற்றும் சியால்கோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதேபோல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் சியால்கோட்டில் இந்தியா தாக்கியது.
கடற்படை அட்டாக்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கடற்படையும் களத்தில் இறங்கி தாக்கியது. கடற்படை சார்பாக கராச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 54 ஆண்டுகளுக்கு பிறகு கராச்சி மீது இந்திய கடற்படை தாக்கி உள்ளது
பாகிஸ்தானின் ஏற்றுமதி இறக்குமதி கராச்சியில் நடக்கும் நிலையில் தாக்குதல் நடதப்பட்டது. கராச்சி துறைமுகம் பாகிஸ்தானின் மிக முக்கிய பொருளாதார தளம் ஆகும். கராச்சி துறைமுகம்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இங்கே 1971ல் நடந்த போரின் போது இந்தியா தாக்கியது.
அதன்பின் 54 ஆண்டுகளுக்கு பிறகு கராச்சி மீது இந்திய கடற்படை தாக்கி உள்ளது. கராச்சி துறைமுகம் பாகிஸ்தானின் நரம்பு போன்றது. அதை இந்தியன் நேவி தாக்கி உள்ளது. கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை கப்பல்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.












Click it and Unblock the Notifications