பலாத்காரம்: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்.. மீறினால் போலீஸ் மீது நடவடிக்கை.. மத்திய அரசு
டெல்லி: பாலியல் குற்றச் சம்பவங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளது.
உ.பி. ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில்தான், உ.பி. மட்டுமல்லாது, நாடு முழுக்க பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளதால் அதனை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடயங்களை சேகரித்து விரைந்து வழக்கை செயல்படுத்தவும், பலாத்கார வழக்கு விசாரணையை 60 நாட்களுக்குள் (2 மாதங்கள்) முடிக்குமாறும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தகவல்கள் பாதுகாப்பு
பலாத்கார சம்பவம் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரின் அனுமதியோடு, உரிய மருத்துவரைக் கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

போலீஸ் மீது நடவடிக்கை
இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் ஏதேனும் தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை
இதனிடையே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நாடு முழுக்க, 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவில் பலாத்காரங்கள்
கடந்த மாதம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பலாத்கார வழக்குகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இது 2018ம் ஆண்டைவிட 7 சதவீதத்திற்கும் அதிகமாகும். 2018 ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட பலாத்காரம் அதிகரித்திருந்தது. 2017ல் 32,559 வழக்குகளும், 2018ல் 33,356 பலாத்கார வழக்குகளும் நாடு முழுக்க பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications