குவைத் மன்னர் மறைவு- நாடு முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு- மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானதை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்று எண்ணெய் வளமிக்க குவைத். குவைத் நாட்டின் மன்னராக அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா 3 ஆண்டுகள் ஆட்சி செய்தார். குவைத் மன்னருக்கு கடந்த மாதம் உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி 86 வயதில் குவைத் மன்னர் காலமானார்.

குவைத் மன்னர் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் குவைத் மன்னர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இந்தியா முழுவதும் ஒருநாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனயடுத்து அரசு நிகழ்ச்சிகள் எதுவும் இன்று நடைபெறாது; தேசிய கொடி பறக்கும் கம்பங்களில் இன்று ஒருநாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும் என தெரிவித்துள்ளது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications