ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கம் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு மத்திய அரசு அதிரடி தடை!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான தெஹ்ரீக்-இ-ஹுரியத், சட்டவிரோத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
இது தொடர்பான மத்திய அரசின் அறிவிகை: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967-ன் பிரிவு 3 (1)-ன் கீழ் ஜம்மு-காஷ்மீர் தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்பை 'சட்டவிரோத அமைப்பு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நோக்கில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தைப் பரப்புவது மற்றும் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்காகப் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமர் நரேந்திர மோடியின் சமரசமற்ற கொள்கை அடிப்படையில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்பின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தெஹ்ரீக்-இ-ஹுரியத்தின் நோக்கம் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதாகும். இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்காக பயங்கரவாதத்தையும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் தூண்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், ஆயுதச் சட்டம், ஆர்பிசி மற்றும் ஐபிசி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் பல குற்றவியில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications