Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரம்மாஸ்திரத்தை எடுக்கும் இந்தியா.. காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஓசிஐ அட்டை ரத்து! வெளியான வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும் விதமாக ஓசிஐ அட்டைகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

காலிஸ்தான் பயங்கரவாதி என இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட கனடாவை சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலையில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Union govt has decided to cancel the OCI cards for the supporters of Khalistan movements

இதனை தொடர்ந்து இந்திய தூதரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கனடாவும், கனடா தூதரை வெளியேறுமாறு இந்தியாவும் உத்தரவிட்டது. விசா நடைமுறைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியாவும், கனடாவும் கொண்டு வந்து உள்ளன. இரு நாடுகளின் நேச நாடுகளும் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், பிரச்சனையின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில்தான் இந்தியா கனடாவில் உள்ள காலிஸ்தான் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் வேகம் காட்ட தொடங்கி உள்ளது. அந்த வகையில் நேற்று என்.ஐ.ஏ. காலிஸ்தான் தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துக்களை முடக்கி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பன்னுவின் பல சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அதாவது எஸ்.எஃப்.ஜே. எனப்படும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னு இந்திய புலனாய்வு முகமையின் கண்காணிப்பு வளையத்தின் கீழ் தொடர்ந்து இருந்து வருகிறார். கனடாவில் இருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதியான பன்னுவுக்கு எதிராக 3 தேசதுரோக வழக்குகள் உட்பட பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 22 குற்ற வழக்குகள் உள்ளன.

பன்னுவை தொடர்ந்து காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பலரையும் இந்தியா கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்து உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த தேடப்பட்டு வரும் 19 காலிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியா கண்டுபிடித்து உள்ளது. இந்த 19 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளன.

இவர்களுக்கு முன்பாக கனடா, அமெரிக்கா, பாகிஸ்தானில் வசித்து வந்த பயங்கரவாதிகள், ரவுடிகள் என அடையாளப்படுத்தப்பட்ட 11 பேரை இந்திய அரசு கண்டுபிடித்து இருக்கிறது. இவர்களில் 8 பேர் கனடாவில் வசித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் காலிஸ்தான் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி உள்ளது.

பன்னுவில் சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பு சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத பாதைக்கு அழைப்பது, குற்றங்களில் ஈடுபடுத்துவது போன்ற வேலைகளை செய்ததாக என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் தெரியவந்து உள்ளது. அதேபோல் ஓ.சி.ஐ. அட்டைகளுடன் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தங்கி இருந்து இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டு வருபவர்களையும் என்.ஐ.ஏ. கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. தேவைப்பட்டால் அவர்களின் ஓ.சி.ஐ. அட்டைகளை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+