மூத்த காங். தலைவர் மணிசங்கர் ஐயர் மகளின் என்ஜிஓ வெளிநாட்டு நிதி உதவி பெறும் லைசென்ஸ் அதிரடி சஸ்பெண்ட்!
மணிசங்கர் ஐயரின் மகளுக்கு சொந்தமான என்ஜிஓ வெளிநாட்டு நிதி உதவிக்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயரின் மகள் நடத்தி வரும் என்ஜிஓ அமைப்பான Centre for Policy Research-ன் வெளிநாட்டு நிதி உதவி பெறும் லைசென்ஸை மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் வெளிநாடுகளில் நிதி உதவி பெறும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகளான என்ஜிஓக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு மதம் சார்ந்த செயல்பாடுகளைக் கொண்ட என்ஜிஓக்களின் வெளிநாட்டு நிதி உதவி லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் இருக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையில் இப்போது சிக்கி இருப்பது Centre for Policy Research (CPR) என்ற என்ஜிஓ. இந்த அமைப்பின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் யாமினி ஐயர். மூத்த காங்கிரஸ் தலைவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிசங்கர் ஐயரின் மகள்தான் யாமினி ஐயர்.
Centre for Policy Research (CPR) அமைப்பானது வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான விதிமுறைகளை மீறி இருப்பதால் இந்த லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு சிபிஆர், ஆக்ஸ்பாம் உள்ளிட்ட பல அமைப்புகளில் வருமான வரித்துறையினர் சர்வே மேற்கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி வருமான வரித்துறையினர் இந்த ஆய்வை நடத்தி இருந்தனர். இந்த அமைப்புகளின் வெளிநாட்டு நிதி உதவி பெறக் கூடிய லைசென்ஸ் செப்டம்பர் 30-ந் தேதி காலாவதியாகிவிட்டது.
தற்போது வருமான வரி சர்வே உள்ளிட்டவை அடிப்படையில் மணிசங்கர் ஐயரின் மகளுக்கு சொந்தமான என்ஜிஓ நிறுவனத்தின் லைசென்ஸ் முடக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications