சிகரெட் லைட்டர் இறக்குமதியை தடை செய்வீர்களா? தீப்பெட்டித் தொழிலை காக்க மாநிலங்களவையில் வைகோ குரல்!
டெல்லி: தீப்பெட்டித் தொழிலை காக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை இந்திய அரசு தடை செய்யுமா? என மாநிலங்களவையில் வைகோ கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல், ஆம் இல்லை என பதிலளிக்காமல் சுற்றி வளைத்து ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு;
வைகோ கேள்வி
(அ) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை உடனடியாக தடை செய்யுமாறு அமைச்சகத்தை வலியுறுத்தி தமிழக முதல்வரிடமிருந்து கடிதம் ஏதும் பெறப்பட்டதா? (ஆ) அப்படியானால், அரசின் பதில் என்ன?
(இ) சீனா போன்ற நாடுகளில் இருந்து சட்டப்பூர்வமாக அல்லது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதால், தீப்பெட்டித் தொழில் அதன் உள்நாட்டுச் சந்தையை இழக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிறதா?
(ஈ) தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பைத் தரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
அனுப்ரியா படேல் பதில்
(அ): ஆம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை உடனடியாகத் தடை செய்யக் கோரி தமிழக முதல்வரிடமிருந்து 08.09.2022 தேதியிட்ட கடிதம் வந்துள்ளது.
(ஆ) முதல் (ஈ): சிகரெட் லைட்டர்களுக்கான கட்டாய இந்திய தரநிலைகளை அறிவிப்பதற்காக, இந்திய தரநிலைகளின் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் ஆராயப்பட்டது. மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்யும் போது, சட்டவிரோத இறக்குமதி, குறைவான விலைப்பட்டியல் மற்றும் தவறான அறிவிப்பு ஆகியவற்றை சரிபார்க்க வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications