தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கு- வைகோவை இடை மனுதாரராக சேர்க்க தீர்ப்பாயம் மறுப்பு!
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசு தடை தொடர்பாக விசாரணை நடத்தும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயமானது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோவை இடை மனுதாரராக சேர்க்க மறுத்துவிட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடர்பான வழக்கின் ஆவணங்களை வெளியே இருந்து ஆய்வு செய்யலாம் எனவும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயம் வைகோவுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் Unlawful Activities (Prevention) Act (UAPA படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து இதன் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து கடந்த மே மாதம் அறிவிக்கை வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகமானது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கும் முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை அமைத்தும் உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த தீர்ப்பாயமானது, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்க கூடாது? விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சார்பில், இந்தத் தீர்ப்பாயத்தில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்தியாவில் தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை, இந்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கடந்த ஜூலை மாதம் மனு அளிக்கப்பட்டது.
தற்போது இந்த சட்ட தீர்ப்பாயமானது, வைகோ வை இடை மனுதாரராக சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கின் ஆவணங்களை வெளியில் இருந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என வைகோவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. வைகோ தமது மனுவில் கடந்த 5 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடி தொடர்பில் இருந்தார் என்கிற ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி இடை மனுதாரராக சேர்க்க தீர்ப்பாயம் மறுத்துள்ளது.
அதேநேரத்தில் இந்திய அரசால் அங்கீகாரம் பெறாத, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரனை மனுதாரராக சேர்ப்பது தொடர்பாகவும் சட்ட தீர்ப்பாயம் ஆலோசனை நடத்தியது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications