விவாதிக்க ரெடியா? 100 நாள் திட்டம் - ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் அதிரடி சவால்!

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் சவால் விட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக தம்முடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான (MGNREGA) நிதி ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு குறைத்துவிட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் அளித்துள்ள பதில்:

Union Minister Giriraj Singh challenges Rahul Gandhi to debate on MGNREGA

2004-14 ஆண்டுக் காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மற்றும் கடந்த 9 ஆண்டு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஆட்சிக் காலத்தின்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சொத்துக்கள் உருவாக்கம் ஆகிய இரண்டு அம்சங்கள் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதிக்கத் தயார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 33,000 கோடியைத் தாண்டவில்லை. பெரும்பாலான நிதி ஆண்டுகளில், கிராமப்புற வேலைத் திட்டத்தை மோசமாகச் செயல்படுத்தியதால் அந்த நிதியிலும் குறிப்பிட்டத் தொகை திரும்பி வந்தது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற மே 2014 முதல், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் மதிப்பீட்டை விட திருத்தப்பட்ட மதிப்பீடு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டும் ரூ.73,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு; ஆனால் அதன் செலவு ஏற்கெனவே ரூ.89,400 கோடியைத் தொட்டுள்ளது,

2019-20 நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீடு ரூ.60,000 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.71,000 கோடியாகவும் இருந்தது. 2020-21-ல் ரூ.61,500 கோடி பட்ஜெட் மதிப்பீடு; ஆனால் செலவு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்தது.

கோவிட் தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு மக்களின் இடப் பெயர்வு அதிகரித்ததன் காரணமாக அந்த ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான ஆரம்ப ஒதுக்கீட்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு செலவு அதிகரித்தது. இதேபோல், 2021-2022-ம் நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்படு ரூ.73,000 கோடி; ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.99, 117 கோடியைத் தொட்டது.

Union Minister Giriraj Singh challenges Rahul Gandhi to debate on MGNREGA

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சொத்து உருவாக்கத்தை சரிபார்த்து விவாதிக்க வரவேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தில் சொத்து உருவாக்கம் வெறும் 17 சதவிகிதம்தான். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில், இத்திட்டத்தில் சொத்து உருவாக்கம் ஏற்கெனவே 60 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. பள்ளங்களைத் தோண்டுவதும் குழிகளை நிரப்புவதும் என இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணிகளையும் அதன் நோக்கத்தையும் பிரதமர் நரேந்திர மோடி மாற்றி அமைத்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டச் சட்டத்தின் (MGNREGA) கீழ் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஏழைகளுக்கு எதிராக அரசு ஆதாரை தவறாகப் பயன்படுத்துகிறது என்கிறார் ராகுல் காந்தி. இப்படியான திட்டங்களை செயல்படுத்துவதில் முழு வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+