Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெத்தா..! வேட்டி சட்டையில் கேன்ஸ் விழாவில் மாஸ் காட்டிய எல்.முருகன்! கூட இருப்பது யாருனு தெரியுதா..?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்டி சட்டையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் எல்.முருகன் பகிர்ந்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் மே 17-ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பதினொரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன.

கேன்ஸ் திரைப்பட விழா

கேன்ஸ் திரைப்பட விழா

இந்த ஆண்டிற்கான நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டுள்ளார். மேலும், இந்தாண்டு கேன்ஸ் விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரைப்பிரபலங்கள் கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், மாதவன், ஐஸ்வர்யா ராய், தீபிகோ படுகோனே, ஊர்வசி ரௌதாலா, தமன்னா, பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சிவப்பு கம்பள வரவேற்பு

சிவப்பு கம்பள வரவேற்பு

மேலும் இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ரிக்கி கேஜ், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற துவக்க விழாவில் மாதவன், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

எல். முருகன் பங்கேற்பு

எல். முருகன் பங்கேற்பு

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டுள்ளார். மே 22ஆம் தேதியான நேற்று முதல் மே 24-ஆம் தேதியான நாளை வரை முருகன் கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்கிறார். இதற்காக சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டிற்கு எல். முருகன் பயணம் மேற்கொண்டார்.

வேட்டி சட்டையில் மாஸ்

வேட்டி சட்டையில் மாஸ்

விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் வரவேற்ற நிலையில், நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் எல்.முருகன் வேட்டி சட்டையில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வில் இன்று பங்கேற்றுள்ளார். அந்த விழாவில் அவர் வேட்டி சட்டையில் , நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. வேட்டி சட்டையில் இருக்கும் முருகன், கோட் சூட்டுடன் இருக்கும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுடன் நிற்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் முருகன் பகிர்ந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+