கச்சத்தீவு: காங்கிரஸுடன் சேர்ந்து இலங்கைக்கு கொடுத்த திமுக- மோடியை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் சாடல்
டெல்லி: கச்சத்தீவை காங்கிரஸுடன் சேர்ந்து இலங்கைக்கு தாரைவார்த்த திமுக, பிறரை கேள்வி கேட்கும் போக்கு தவறு என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் இருந்து விவரங்களைப் பெற்று பகிர்ந்துள்ளார். இதில் 1974-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார். இது தொடர்பான தகவல்கள் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது என தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

இதனை முன்வைத்து பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். தமது சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, காங்கிரஸின் இத்தகைய போக்கு இந்தியர்களை கோபமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸை மக்கள் நம்பமாட்டார்கள் என கொந்தளித்திருந்தார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது எக்ஸ் பக்கத்தில், பாஜக தலைவர் அண்ணாமலையி ன் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக வெளிவந்த உண்மை. கச்சதீவு கைமாறியது காங்கிரஸ் 1976ல். இதைப்பற்றிய முழு விவரம்1974 ஜூன் மாதம் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்துவரும் ஆளும் கட்சி திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸுடன் உடன்சேர்ந்து தாரைவார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு எனவும் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை பாகிஸ்தானை முன்வைத்து இலங்கைக்கு தன்னிச்சையாக தாரைவார்த்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. மத்திய காங்கிரஸ் அரசின் இந்தப் போக்குக்கு அன்றைய திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாடு சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி டெல்லியிடம் எதிர்ப்பைப் பதிவு செய்தது என்பது திமுக தரப்பின் நீண்டகால விளக்கம். இந்த விளக்கங்களையும் மீறி தற்போது பாஜக, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கச்சத்தீவு விவகாரத்தை தேர்தல் களத்தில் பேசுபொருளாக்கி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications