ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுகிறதா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?
டெல்லி: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது என்பது மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். மேலும் மாநிலங்கள் ஒப்புக் கொண்டால் என்ன விகிதத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி விதிபது என முடிவு செய்வோம் என்றார் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா மற்றும் மேகாலயா முதலமைச்சர்கள், பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா துணை முதலமைச்சர்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார். அப்போது, பால் கேன்களுக்கு (எஃகு, இரும்பு, அலுமினியம்) 12% ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது; சாமானிய மக்களுக்கு ரயில்வே வழங்கும் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது; அனைத்து சூரிய சமையல் குக்கர்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நிர்மலா சீதாராமன் விவரித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்த சந்திப்பின் போது ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்- டீசல் கொண்டுவரப்படுமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்- டீசல் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கிறது. மாநில அரசுகள் பரிந்துரைத்தால் பெட்ரோல்- டீசலுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு விகிதம் விதிப்பது என முடிவு செய்யலாம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications