அன்லாக் 4.0.. சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும்.. சிறப்பு விமானங்களுக்கு அனுமதி!
டெல்லி: செப்டம்பர் 30ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அப்போது சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

வந்தே பாரத் மிஷன் என்ற பெயரில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்க, அமெரிக்க நாடுகள், அட்லாண்டிக் நாடுகள் என்று 30க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினார்கள்.
10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இதன் மூலம் தாயகம் திரும்பினார்கள். இந்த நிலையில் தற்போது சர்வதேச விமான சேவைக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுக்க மத்திய அரசு மூலம் தற்போது அன்லாக் 4.0 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அன்லாக் 4.0 செயல்முறை செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். அன்லாக் 4.0வின் கீழ் செப்டம்பர் 30ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இயக்கும் வந்தே பாரத் மிஷன் போன்ற சிறப்பு விமானங்கள் மட்டுமே தொடர்ந்து இயங்கும்.
உள்நாட்டு விமான போக்குவரத்து எப்போதும் போல தொடர்ந்து செயல்படும். சர்வதேச சரக்கு விமான போக்குவரத்தும் எப்போதும் போல தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications