ஐநா பாதுகாப்பு கவுன்சில்: இந்தியா நிரந்தர மெம்பராக 4 நாடுகள் ஆதரவு! சீனா எதிர்ப்பு! அமைச்சர் தகவல்!
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சார்பில் நிரந்தர உறுப்பினர்கள் அமர்த்தப்படுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கோரிக்கையின் மீது சமீபத்தில் விவாதம் நடைபெற்றது.
இதில், ஏற்கெனவே நிரந்தர உறுப்பினர்கள் உள்ள நாடுகள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் ஏற்கெனவே நிரந்தர உறுப்பினர்களை கொண்டுள்ள 5 நாடுகளில் 4 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனா இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கவுன்சில்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த உறுப்பினர்களை நிரந்தரமாக கொண்டுள்ளது. இந்நிலையில் நிரந்தர உறுப்பினர்களுக்கான எண்ணிக்கையை விரிவாக ஐநா திட்டமிட்டிருந்தது. உலக அமைதியை வலுப்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி இந்தியா எப்படியாவது தானும் ஒரு நிரந்தர உறுப்பினராகிவிட வேண்டும் என தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் இதற்கான போட்டியில் சீனா இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

சீனா
இவ்வாறாக இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாவதற்கு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டதாகவும், பல்வேறு நாடுகளிடையே பலதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.கடந்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பின்போது சீர்திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்காவின் ஆதரவை பிரதமர் மோடி உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

எதிர்ப்பு ஏன்
இந்தியா மட்டுமல்லாது ஜப்பான், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றன. இவ்வாறு நிரந்தர உறுப்பினர்களாவதன் மூலம், அந்நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பெறும். வீட்டோ அதிகாரம் என்பது, இதர நாடுகள் தங்கள் நாடுகள் மீது போர் அல்லது பொருளாதாரத்தடை உள்ளிட்ட தீர்மானத்தை கொண்டுவரும் நிலையில் அதை இந்த வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ய முடியும்.

வீட்டோ
நிரந்தர உறுப்பினர்களால் மட்டுமே இந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியும். கடந்த பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போரையடுத்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா ஐநா சபையில் தீர்மானத்தை கொண்டு வந்தது. இதனை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது. நிரந்தர நாடுகளின் அதிகாரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.












Click it and Unblock the Notifications