உ.பி. கெடுவை மீறி டெல்லி காசிப்பூர் எல்லையில் இரவிலும் விவசாயிகள் போராட்டம்- பதற்றம்!
டெல்லி: டெல்லி காசிப்பூர் எல்லையில் இருந்து கலைய வேண்டும் என உபி அரசு பிறப்பித்த உத்தரவை மீறி இரவிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் அமைதிவழியில் 63 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி நகருக்குள் டிராக்டர்கள் ஊர்வலம் நடத்தப்பட்டது பெரும் மோதலை ஏற்படுத்தியது.
விவசாயிகளுடன் உள்ளே நுழைந்த சமூக விரோதிகள்தான் இந்த மோதல்களுக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் இம்மோதல்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன.

இரவுக்குள் முடிக்க கெடு
இந்த நிலையில் காசிப்பூர் எல்லையில் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தை இன்று இரவுக்குள் முடிவுக்கு கொண்டுவருவதில் உத்தரப்பிரதேச அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. முதல் கட்டமாக காசிப்பூர் போராட்ட இடத்தில் இருந்து இரவுக்குள் அனைத்து விவசாயிகளும் வெளியேற வேண்டும் என காசியாபாத் உள்ளூர் நிர்வாகம் கெடு விதித்துள்ளது.

சரணடைய மறுப்பு
இதனிடையே டெல்லி வன்முறைகள் தொடர்பாக சரணடைய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்துக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் நாங்கள் சரணடைய முடியாது; குடியரசு தின வன்முறைகள் தொடர்பாக உச்சநீதிமன்ற குழு விசாரணை நடத்தட்டும் என்கிறார் ராகேஷ் திகாயத்.

முடிவுக்கு வரும்
அதேநேரத்தில் அவரது சகோதரர் நரேஷ் திகாயத், இன்று இரவுக்குள் காசிப்பூர் எல்லைப் போராட்டம் முடிவுக்கு வரும் என கூறியுள்ளார். இன்னொரு பக்கம் காசிப்பூர் எல்லை போராட்டம் தொடர்ந்தால் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை உ.பி. அரசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடரும் போராட்டம்
இந்த நிலையில் காசிப்பூர் எல்லையில் உத்தரப்பிரதேச அரசின் கெடுவை மீறி இரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே உத்தரப்பிரதேச அரசின் கெடுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications