காசில்லாம வெளியே வராதீங்க.. கடை வாசல்களில் நகம் கடிக்க வைத்த யுபிஐ! இந்தியா முழுவதும் இதே பிரச்சினை!
டெல்லி: நாடு முழுவதும் 6 மணி முதல் 11 மணி வரை யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்திய மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர். யுபிஐ வேலை செய்யவில்லை என இணைய சேவை செயலிழப்பை கண்காணிக்கும் டவுன் டிடெக்டரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளது. கடந்த சில தினங்களாகவே யுபிஐ சேவையில் பெரும் குறைபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
யுபிஐ சேவையை பயன்படுத்தாதவர்களை இப்போது விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. கையில் ஒரு பைசா ரொக்கமாக கொண்டு செல்லாமல், பெட்டி கடை முதல் வணிக வளாகம் முதல் நினைத்ததை தற்போது யுபிஐ செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட இந்த யுபிஐ மூலமாக பணப்பரிமாற்றம் எளிதாக இருப்பதால், பொதுமக்களும் அதிக அளவில் இதை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். யுபிஐ சேவைகளுக்காக போன் பே, ஜிபே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட பல்வேறு மொபைல் அப்ளிகேஷன்கள் செயல்பட்டு வருகிறது.

இது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கி மூலமே யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டை கூட தற்போது போன் பே உள்ளிட்ட அப்ளிகேஷன்களில் இணைத்து சிறுக சிறுக செலவழித்துக் கொள்ளலாம். போன் பே உள்ளிட்டவை வந்த பிறகு பலர் கைகளில் பணமே வைத்துக் கொள்வதில்லை. எதற்கெடுத்தாலும் யுபிஐ ஸ்கேனர் இருக்கிறதா என்று பெட்டி கடைகளில் கூட கேட்டு வருகின்றனர்.
ஆனால் சில நேரங்களில் யுபிஐ நம்மை மாட்டி விடுவதும் உண்டு. அப்படித் தான் இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போன் பே, ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் வேலை செய்யவில்லை என புகார் அளித்துள்ளனர் பயனர்கள். இரவு 7 மணியிலிருந்து போன் பே, ஜி பே போன்ற செயலிகள் செயல்படவில்லை என ஆன்லைன் சேவைகளை புகார் அளிக்கும் டவுன் டிடெக்டரில் ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்திருக்கின்றனர். 6.56 மணிக்கு 32 பேரும், 7.10க்கு 1137 பேரும், 7.41க்கு 2974 பேரும், 7.56 க்கு 2085 பேரும் அதிகபட்சமாக 7.41 மணிக்கு 3974 பேரும் புகார் அளித்திருக்கின்றனர்.
மாலை 6 மணிக்கு 27 பேர் தங்கள் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதாக கூறிய நிலையில், 7 மணிக்கு 699, பேரும் 7.10 600 பேரும், அதிகபட்சமாக ஏழரை மணிக்கு 900 பேரும் யுபிஐ வேலை செய்யவில்லை என புகார் அளித்தனர். தொடர்ந்து 7.30, 8.00, 9.15 மணி, 10 மணி மணி வரை இந்த பிரச்சனை இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். நிதி பரிமாற்றத்தில் 62%, அப்ளிகேஷன் பயன்பாடுகளில் 21 சதவீதமும், பணம் செலுத்துவதில் 17 சதவீதம் பேரும் சிக்கல் இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.
இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்த முடியாமலும், பிறருக்கு பணம் அனுப்ப முடியாமலும் கடும் அவதி அடைந்தனர். யுபிஐ செயல்பாடு பிரச்சனையை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த சில தினங்களாகவே இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அதே நேரத்தில் என்பி சிஐ இது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் அதிகபட்ச பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிகளின் டிராபிக் காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications