எஸ்கேப்பாகும் இந்தியா.. ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி என அறிவித்த டிரம்ப்.. மத்திய அரசு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் நம் நாடும் பாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் இந்த வரி விதிப்பால் நம் நாட்டுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படாது என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானில் தற்போது உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

us-donald-trumps-25-percent-tariffs-on-iran-trade-to-have-minimal-impact-on-india-says-union-gover

இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பம் மாதம் 28 ம் தேதி தொடங்கிய போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தை முடக்க ஈரான் அரசு முயன்று வருகின்றது. பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் ஈரானில் நடக்கும் மக்கள் போராட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். ஈரான் மக்களுக்கு உதவி செய்வதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்கனவே கடுமையான பகை உள்ளது. இதனால் டிரம்ப், ஈரான் அரசை முடக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஈரான் மீது ஏற்கனவே அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ள நிலையில் நேற்று புதிதாக ஒரு அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.

அதில், ‛‛ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதிக்க உள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது'' என்று கூறியுள்ளார். இதனால் நம் நாடு மட்டுமின்றி பல நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஈரானுடன் பிற நாடுகள் மேற்கொள்ளும் வர்த்தகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டது. இது ஈரானில் இன்னும் மக்கள் போராட்டத்தை அதிகப்படுத்தும்.

ஏற்கனவே நம் நாட்டுக்கு டிரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ளார். இப்போது ஈரான் வர்த்தகத்தை சுட்டிக்காட்டி 25 சதவீத வரி என்றால் மொத்த வரி 75 சதவீதமாக அதிகரிக்கும். இதனை தவிர்க்க ஈரானுடன் வர்த்தகம் செய்யாவிட்டால் அதற்கு பதில் புதிய மார்க்கெட்டை தேடும் தேவை உள்ளது. இதனால் வர்த்தகர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இப்படியான சூழலில் தான் டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு நம் நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நம் நாட்டுக்கும் ஈரானுக்கும் இடையேயான வர்த்தகம் என்பது குறைவாக தான் உள்ளது. நம் நாடும், ஈரானும் நல்ல நட்பு நாடுகள் தான். ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளால் இருநாடுகள் இடையே வர்த்தகம் குறைவாக தான் நடக்கிறது.
கடந்த 2024ம் ஆண்டு ஈரான் பல்வேறு நாடுகளில் இருந்து 68 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது. இதில் நம் நாட்டில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே பொருட்கள் சென்றது.

அதாவது நம் நாட்டுக்கும், ஈரானுக்கும் இடையே வெறும் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது. இதில் நம் நாடு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை நம் நாடு ஏற்றுமதி செய்தது. இது நம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் வெறும் 0.15 சதவீதம் தான்.

இதனால் டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு என்பது நம் நாட்டை பெரியளவில் பாதிக்காது. நம் நாடு ஈரான் வர்த்தகத்தை கைவிடும்பட்சத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு கூட அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக சிறிய அளவில் தான் பாதிப்பு இருக்கும். அதற்கும் கூட சில வாரங்களில் புதிய மார்க்கெட்டை தேடி பிடிக்க முடியும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+