நாள் குறிச்சாச்சு.. அமெரிக்க அதிபர் இந்தியாவில் மோடியை சந்திக்கிறார்! ஜி20க்கு முன் இருதரப்பு பேச்சு
டெல்லி: இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லி வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இரு தரப்பு ஆலோசனையில் கலந்துகொள்ள உள்ளார்.
உலகின் சக்தி வாய்ந்த கூட்டமைப்பாக கருதப்படும் ஜி20 கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, சவூதி அரேபியா, துருக்கி, இந்தோனேஷியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, கனடா, பிரேசில், தென் கொரியா, துருக்கி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா உள்ள நாடுகள் உள்ளன.

இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் மட்டும் சர்வதேச ஜிடிபியில் 85 சதவீதத்தையும், 75 சதவீத சர்வதேச வர்த்தகம், உலக மக்கள் தொகையில் 3ல் 2 மடங்கு மக்கள் தொகையையும் கொண்டு இருக்கின்றன. ஆண்டுதோறும் ஜி20 நாடுகள் மாநாடு வெவ்வேறு நாடுகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் ஜி20 நாடுகளின் 17 வது உச்சி மாநாடு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனோசியா தலைநகர் பாலியில் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
அந்த மாநாட்டில் ஜி 20 நாடுகள் குழுவின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு இதன் தலைமை பதவியை ஏற்று, அந்த நாட்டில் ஜி 20 கூட்டம் நடத்தப்படும் நிலையில், இந்த ஆண்டுக்கான ஜி 20 மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து மத்திய அரசு ஜி20 மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும், விளம்பரப் பணிகளையும் கடந்த பல மாதங்களாக செய்து வருகிறது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தந்து ஜி20 மாநாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்கள். இந்த வரும் செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் ஜி 20 கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இதில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தியா வருகிறார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை டெல்லியில் அவர் 3 நாட்கள் தங்குகிறார்.
ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் அவர், உலகளாவிய பிரச்சனைகளை கையாள்வதற்கான கூட்டு முயற்சிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்க உள்ளார். இந்த கூட்டத்தின் பல்வேறு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ள .
கடந்த சில நாட்களுக்கு வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ஜோ பைடனின் இந்திய பயணம் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவை இந்த பயணம் வலுப்படுத்தும் என்றும், காலநிலை மாற்றம், உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகளில் இந்தியா - அமெரிக்கா ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.
ஜோ பைடனின் இந்த இந்திய சுற்றுப்பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை அவர் தனியாக சந்தித்து, இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜி 20 கூட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக செப்டம்பர் 8 ஆம் தேதி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications