சீனாவுக்கு செம்ம பீதி... உத்தரகாண்ட் எல்லையில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா- சீனா எல்லையில் உத்தரகாண்ட் மாநிலப் பகுதியில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்சனைகள் யுத்தங்களை தாண்டியும் தொடர் கதையாகி வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் சீனா ஊடுருவியதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஆண்டுகளாய் தொடருகின்றன. லடாக் எல்லை, அருணாச்சல பிரதேச எல்லை, பூடான் எல்லை என அனைத்து பகுதிகளிலும் சீனாவின் தொல்லை நீடிக்கிறது.

US to participate in military drill near with India near China Border

இந்நிலையில் சீனாவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் உத்தரகாண்ட் மாநில எல்லைப் பகுதியில் இந்தியா- அமெரிக்க ராணுவம் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் இந்த ராணுவ பயிற்சி நடைபெறும். எக்ஸ் யுத் அபியாஸ் 2022 என்ற பெயரில் இக்கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படும்.

எக்ஸ் யுத் அபியாஸ் என்பது ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியாகும். தற்போது நடைபெற உள்ளது எக்ஸ் யுத் அபியாஸ்-ன் 18வது பதிப்பாகும்.

எக்ஸ் யுத் அபியாஸ்-17வது பதிப்பானது எக்ஸ் யுத் அபியாஸ் 2021 என்ற பெயரில் எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சன், அலாஸ்கா (அமெரிக்கா) கூட்டு தளத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. அதன் துவக்க விழாவில் இரு நாடுகளின் தேசிய கொடிகள் ஏற்றபட்டதோடு, இரு நாடுகளின் தேசிய கீதங்களான 'ஜன கண மன' மற்றும் 'தி ஸ்டார் ஸ்பாங்கில்ட் பேனர்' இசைக்கப்பட்டன.

US to participate in military drill near with India near China Border

இந்திய-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த பயிற்சி நடைபெற்றது. 7 மெட்ராஸ் இன்ஃபான்ட்ரி பட்டாலியன் பிரிவை சேர்ந்த 350 வீரர்களை கொண்ட இந்திய குழுவும், ஃபர்ஸ்ட் ஸ்குவாட்ரான் பிரிவை (வான்வழி) சேர்ந்த 350 அமெரிக்க வீரர்களும் இதில் பங்கேற்றனர்.

இதற்கு முந்தைய பதிப்பு 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் ராஜஸ்தானின் பிகானெரில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இரு ராணுவங்களுக்கிடையே புரிதல், ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாக கொண்டது. குளிர் பருவ நிலைகளில் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் குறித்த பகிர்தல்கள் மற்றும் ஒரு தரப்பின் சிறந்த செயல்முறைகளை மற்றொரு தரப்பு கற்று கொள்ளுதல் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+