ஒழுங்கா இந்தியாவுக்கு ஒத்துழைப்பு கொடுங்க.. பாக். பிரதமரை கண்டித்த அமெரிக்கா! நிலைமையே மாறுதே!
டெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சர்வதேச அளவில் விவாதங்களாக வெடித்திருக்கிறது. இதுபற்றிய விசாரணை மற்றும் இதர நடவடிக்கைகளில் இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமருக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்பை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக கண்டித்திருக்கிறார். மேலும் இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேபோல இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றங்களை குறைத்து, தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் போனில் பேசிய ரூபியோ, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுடனான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு தொடரும் என்றும் கூறியிருக்கிறார். ரூபியோவின் பேச்சு சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரூபியோவை தொடர்ந்து, ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ், ஜெய்சங்கரிடமும், ஷெபாஷ் ஷெரிப்புடனும் தனித்தனியாக போனில் பேசியிருக்கிறார்.
பஹல்காம் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள அவர், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்திருப்பதற்கும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார். தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயும் அமைதி ஏற்படுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐநா செய்ய தயார் எனவும் கூறியிருக்கிறார்.
ஐநா தலைவரே நேரடியாக தலையிட்டு இந்த விஷயத்தில் பாகிஸ்தானை கண்டித்திருப்பதும் அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை பாகிஸ்தானை உசுப்பேற்றியிருக்கிறது. அறிவிக்கப்படாத போர் என்று இதனை பாக். கூறியிருக்கிறது. மட்டுமல்லாது இதற்கு பதிலடி என்று சொல்லி சிம்லா ஒப்பந்தத்தையும் பாக். ரத்து செய்திருக்கிறது.
இந்தியா தரப்பில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசார ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், தங்களது அதிகாரிகளை அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த கூடாது என பாக். தடை விதித்திருக்கிறது.
இதனையடுத்து இன்று முதல் இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கவும் மத்திய அரசு தடை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications