வர்த்தக பிரச்சனைக்கு எண்டு கார்டு? இந்தியாவுக்கு கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. பிதற்றிய அமைச்சர்
டெல்லி: ‛‛இந்தியா உடனான பிரச்சனையை விரைவில் தீர்க்க போகிறோம்'' என்று கூறியுள்ள அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், நம் நாட்டுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அந்த கண்டிஷனை பின்பற்றினால் உடனடியாக வர்த்தக ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால் அந்த கண்டிஷனை இந்தியா ஏற்பதில் பெரும் சிக்கல் உள்ளது.
நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வந்தது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீர்குலைத்துள்ளர். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறை, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை போட்டுள்ளார்.

இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இதனால் நம் நாடு அமெரிக்காவுக்கு பதில் சீனாவுடன் நாம் நெருங்கி வருகிறோம்.
இறங்கி வரும் டிரம்ப்?
இது டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதனால் இப்போது அவர் கொஞ்சம் இறங்கி வருவது போல் உள்ளது. நம் நாட்டையும், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்வதை நிறுத்தி விட்டு நட்பாக நினைக்கிறார். பிரதமர் மோடி சிறந்த பிரதமர். அவருடன் எப்போதும் நண்பனாக இருப்பேன். இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது என்று கூறி வருகிறார். அதேபோல் இருநாடுகள் இடையே தடைப்பட்ட வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி உள்ளது. இது இருநாடுகள் இடையேயான உறவில் பாசிட்டிவ் சைனாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வர்த்தக அமைச்சர்
இந்நிலையில் தான் அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக் மீண்டும் நம் நாட்டை சீண்டி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்தியா உடனான பிரச்சனையை விரைவில் தீர்க்க போகிறோம். இது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதை பொறுத்து அமையும். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய உடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
திமிரை குறைத்த லுட்னிக்
இருப்பினும் தற்போது அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக் தனது திமிரை குறைத்து இருந்தாலும் பிதற்றலை மட்டும் சரிசெய்யவில்லை. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு அவர், ‛‛இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படும். விரைவில் அமெரிக்கா வாடிக்கையாளராக வேண்டும் என்று சொல்வார்கள். 50 சதவீத வரியை தடை போட வேண்டும் என்று சொல்வார்கள். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில்... இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும். அவர்கள் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள்'' என்று திமிராக பேசியிருந்தார்.
கண்டிஷனை ஏற்குமா இந்தியா?
ஆனால் இப்போது டிரம்ப் நம் நாட்டின் மீது சாப்ட்கார்னர் காட்டுவதால் ஹாவர்ட் லுட்னிக்கும் வாயை குறைத்துள்ளார். ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் வர்த்தக ஒப்பந்தம் செய்ய தயார் என கண்டிஷன் போட்டுள்ளார். ஆனால் இதனை நம் நாடு பின்பற்றுமா? என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 38 சதவீதம் வரை ரஷ்யா தான் பூர்த்தி செய்கிறது. பிற நாடுகளை ஒப்பிடும்போது ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இது நம் நாட்டுக்கு லாபமாகும்.
இப்படியான சூழலில் நம் நாடு அவரது கண்டிஷனை ஏற்பது சிரமம் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications