Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குழந்தை கடத்தல்.." உபி, பீகாரில் நிலைமை ரொம்பவே மோசம்.. கொரோனாவுக்கு பிறகு பல மடங்கு உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க நடக்கும் குழந்தை கடத்தல் சம்பவங்களில் உத்தரப் பிரதேசத்தில் தான் அதிகபட்ச குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளது என்பது சற்றே அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

கேம்ஸ்24x7 மற்றும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை இணைந்து இந்தியாவில் நடக்கும் குழந்தை கடத்தல் மற்றும் மீட்பு குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

இதில் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திர மாநிலங்களில் குழந்தை கடத்தல் அதிகமாக இருக்கிறது. மேலும், இந்தியாவில் குழந்தை கடத்தல் சம்பவங்களில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் 13-18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 Uttar Pradesh, Bihar tops with most trafficked children

குழந்தை கடத்தல்: கடந்த 10 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகள், போலீசார் அதிகாரிகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் குழந்தை கடத்தப்பட்டால் புகார் அளிப்பது அதிகரித்துள்ளது. இருப்பினும், பொதுமக்களுக்கு இதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்னும் சவாலாகவே உள்ளது. குழந்தை கடத்தலை எதிர்த்துப் போராட விரிவான மற்றும் கடுமையான சட்டங்கள் இப்போது ரொம்பவே அவசியமான ஒன்றாக மாறுகிறது.

கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் உத்தரப் பிரதேசம் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் நடக்கும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் என்பது கொரோனா காலத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது 68 சதவீதம் உயர்ந்துள்ளது.

எங்கே அதிகம்: நாட்டிலேயே ஜெய்ப்பூர் நகரம் தான் குழந்தைகள் கடத்தலின் முக்கிய இடமாக மாறியுள்ளது. அதேநேரம் குழந்தை கடத்தல் அதிகம் நடக்கும் முதல் பத்து மாவட்டங்களில் தேசிய தலைநகர் டெல்லியில் இருந்து நான்கு ஊர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 Uttar Pradesh, Bihar tops with most trafficked children

இதில் குழந்தை கடத்தல் சம்பவங்களில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 9 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் 13 சதவீதம் மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 9 வயதுக்குக் குறைவான குழந்தைகள் 2% மட்டுமே மீட்கப்படுகிறார்கள்.

மீட்கப்பட்ட குழந்தைகள்: 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இந்த அமைப்பின் உதவியால் 18 வயதுக்குட்பட்ட 13,549 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பிறகு குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையும் இது காட்டுகிறது. கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் 2016-2019 காலகட்டத்தில் 267 சம்பவங்கள் பதிவான நிலையில், கொரோனாவுக்கு பிறகு இது 1214 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கர்நாடகாவில் கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் 18 மடங்கு அதிகரித்துள்ளது.

பல்வேறு நடவடிக்கை: இது குறித்து அந்த அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ரியர் அட்மிரல் ராகுல் குமார் ஷ்ராவத் கூறுகையில், "குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகமாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த விவகாரத்தில் நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

 Uttar Pradesh, Bihar tops with most trafficked children

மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளின் எடுத்த உடனடி நடவடிக்கைகளைக் குழந்தை கடத்தலைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. இதில் மாநில அரசுகள் புதிய சட்டங்களை கொம்டு வர வேண்டும். மேலும், கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கத் தொழில்நுட்ப உதவிகளும் தேவை" என்றார்.

குழந்தை தொழிலாளர்கள்: 'Child Trafficking in India: Insights from Situational Data Analysis and the Need for Tech-driven Intervention Strategies' என்ற தலைப்பில் நேற்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் நாட்டில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் குறித்தும் திடுக் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் 13-18 வரையிலானோர் குழந்தை தொழிலாளர்களாக அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அழகுசாதனத் துறையில் மேலும் அதிர்ச்சி தரும் விதமாக 5-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கூட குழந்தை தொழிலாளியாக்கி உள்ளனர்.

குழந்தை தொழிலாளிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஹோட்டல்கள் மற்றும் தாபாக்களில் தான் 15.6% பேர் வேலை செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் கடைகளில் 13%, ஜவுளி துறையில் (11.18%) குழந்தைகள் வேலை செய்கிறார்கள்.. வயது வாரியாக பார்க்கும் போது 13 முதல் 18 வரையிலான குழந்தைகளே அதிகபட்சம் 80% பணியமர்த்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+