மோடியுடன் முக்கிய விஷயங்களை விவாதித்தேன்.. அது என்னவென்று சொல்ல முடியாது: வைகோ பரபர
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தாம் முக்கியமாக சில விஷயங்களை விவாதித்தேன் என்றும் அது குறித்து வெளியே சொல்ல முடியாது என்றும் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.
23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்ற புலி என அழைக்கப்படும் வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைகிறார். தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசின் திட்டங்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைகோ ராஜ்யசபாவுக்கு செல்வது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லிக்கு நேற்று வருகை தந்த வைகோ நாடாளுமன்றத்துக்கு சென்றார். அங்கு அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர், முரசொலி மாறன், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். நாடாளுமன்றத்துக்கு வந்த வைகோவுக்கு எம்.பி.க்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

சு.சுவாமி வாழ்த்து
வைகோவின் பரம வைரியான பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஓடோடி சென்று வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் கை குலுக்கிக் கொண்டு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

மோடியுடன் வைகோ சந்திப்பு
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியையும் வைகோ சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: பிரதமர் மோடியை நான் சந்தித்தேன்.

மோடியின் கமெண்ட்
மோடியையும் அவரது அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறேன். இருந்தபோதும் அவர் என்னை அன்போடு வரவேற்றார். அப்போது நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதாக மோடி கூறினார். அதைப்பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மோடியிடம் சொன்ன முக்கியமானவை
நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவின் பாதிப்பு, ஆந்திராவில் 20 தமிழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம், நதிகள் இணைப்பு ஆகியவை குறித்து மோடியிடம் விளக்கினேன். ஈழத் தமிழர் பிரச்சனை, மகிந்த ராஜபக்சே போர்க்குற்றவாளி ஆகியவை குறித்தும் பேசினேன்.

மிக முக்கியமான விஷயங்கள்
அத்துடன் சில மிக முக்கியமான விஷயங்களையும் விவாதித்தேன். அதைப்பற்றி வெளியில் சொல்ல முடியாது. இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications