என்னா ஸ்பீட்! கண்ணிமைக்கும் நேரத்தில் 180 கி.மீ வேகத்தில் வந்தே பாரத் ரயில்! சொட்டு நீர் கூட சிந்தல
டெல்லி: முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வேகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் மிக முக்கிய போக்குவரத்து முறையாக ரயில்கள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் ரயில் சேவை மிகவும் விரிவானதாக இருக்கிறது.
மேலும், விமான கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அதில் ஒரு பங்கு பணத்தில் நாம் எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம். இதனால் நாட்டில் பலரும் ரயில் போக்குவரத்தையே தேர்ந்தெடுப்பார்கள்.

ரயில்கள்
ஆனால், இந்தியன் ரயில்கள் பல ஆண்டுகளாக எந்தவொரு அப்டேட்டையும் பார்க்கவில்லை. மிகக் குறைந்த தொகைக்குச் சேவையை அளிப்பதால் இந்திய ரயில்வே நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளைப் போல அதிவேக ரயில்களில் இந்தியாவால் பெரியளவில் முதலீடுகளைச் செய்ய முடியவில்லை என்ற நிலையே தொடர்ந்தது. இந்த நிலையை மாற்ற ரயில்வே துறை சில ஆண்டுகளாக முயன்று வருகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த ரயில்களை இந்தியன் ரயில்வே தொடர்ச்சியாகச் சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 180 கிமீ வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது.

அஷ்வனி வைஷ்ணவ்
இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ், வந்தேபாரத்-2 சோதனை ஓட்டத்தில் 180 கிமீ வேகத்தில் சென்றதாகப் பதிவிட்டுள்ளார். கோட்டா-நாக்டா பகுதிகளுக்கு இடையே இந்த வேகச் சோதனை நடத்தப்பட்டது. முதலில் 120 கிமீ வேகத்தில் செல்ல தொடங்கிய ரயில்களின் வேகம் மெல்ல 130,140 என உயர்த்தப்பட்டு 180 கிமீ வேகம் வரை அடைந்தது.

சோதனை
RDSO எனப்படும் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்வதைத் தாங்கும் வகையில் ரயில் பெட்டிகளை உருவாக்கி உள்ளன. மொத்தம் 16 ரயில் பெட்டிகளை இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கோட்டா பிரிவில் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. கோட்டா முதல் ராம்கஞ்ச் மண்டி வரையிலான பகுதிகளில் இந்த விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சொட்டு நீர் கூட சிந்தவில்லை
அப்போது தான் இது 180 கிமீ வேகத்தை எட்டியுள்ளது. அதுவும் ஒரு இடத்தில் இல்லை பல இடங்களில் இந்த ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தைத் தொட்டது. குறிப்பாக 180 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கினாலும் கூட உள்ளே டம்ளரில் இருக்கும் நீரில் ஒரு சொட்டு கூட சிந்தவில்லை. தற்போதுள்ள ரயிலில் உட்கார்ந்து செல்வதே சிரமம். அந்த அளவுக்கு ஆடிக்கொண்டே தான் ரயில்கள் செல்லும். ஆனால் இந்த புதிய வந்தே பாரத் ரயில் சொட்டு நீர் கூட சிந்தாத வகையில் ஸ்டெடியாக செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில் என்பது இந்திய ரயில்வே துறையின் பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

வந்தே பாரத் வசதிகள்
semi-high-speed train வகையைச் சேர்ந்த இந்த அதிவேக ரயில் self-propelled என்ஜினை கொண்டது. மேலும், தானியங்கி கதவுகள், முற்றிலுமாக ஏசி பெட்டிகள், 180 டிகிரி வரை சுழலும் நாற்காலி கொண்டதாகும். இந்த அளவுக்கு வேகத்தில் செல்ல அதற்கேற்ப பெரிய திருப்பங்கள் இல்லாத ரயில் பாதைகளும் தேவை. நமது நாட்டில் இந்த ரயில்கள் கொண்டு வரப்பட்டால் அது பயண நேரத்தைப் பெருமளவு குறைக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications