டெல்லியில் மீண்டும் வெடித்தது விவசாயிகள் போராட்டம்! மோடி அரசை விமர்சித்த துணை ஜனாதிபதி
டெல்லி: வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் ஏன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக உ.பி. பாஜக அரசும் அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன.
மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தினர். கடும் குளிர், கொட்டும் பனி, வெயில் இடையே ஓராண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இறுதியாக மத்திய பாஜக அரசு தமது 3 வேளாண் சட்டங்களை கைவிடுவதாக அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கோரினார்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போது வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு அப்போது வழங்கியது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வலியுறுத்தி உள்ளார். மேலும் உத்தரப்பிரதேச மாநில அரசும் 5 வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்திலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications