குலுங்கிய பூமி.. டெல்லியில் வீடுகளில் எதிரொலித்த நிலநடுக்கம்.. பரவும் ஷாக் வீடியோ! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேபாளத்தில் இன்று தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில் மக்கள் வீடு, அலுவலகங்களில் இருந்து அலறியடித்து பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் தான் டெல்லி நிலநடுக்கத்தின்போது வீடு, அலுவலகங்களில் என்ன நடந்தது? என்பது பற்றிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா உள்பட பல நாடுகளில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கம் என்பது சக்தி குறைந்துள்ளது. இதனால் சேதம், உயிர்பலி ஏற்படுவது இல்லை.

Videos shared on social medias Fans, lights, racks shakes at house in delhi after tremors jolts

இந்நிலையில் தான் இன்று நேபாளத்தில் மதியம் 2.21 மணி முதல் 3.10 மணிக்குள் தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 4.6 ரிக்டர் அளவிலும், 2வதாக 6.2 என்ற அளவிலும், 3வதாக 3.8 ரிக்டர் அளவிலும், 4வதாக 3.1 என்ற அளவிலும் ஏற்பட்டது.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது இந்தியாவின் பல்வேறு இடங்களில் எதிரொலித்தது. அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடு, அலுவலகங்களில் இருந்து அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பவில்லை.

இந்நிலையில் தான் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டடங்களில் என்ன நிகழ்ந்தது என்பது? தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. டெல்லி என்சிஆர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது சீலிங் பேன்கள், கடிகாரங்கள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை அசைந்தன. மேலும் அலமாறிகள் அசைந்ததோடு, அதில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.

Videos shared on social medias Fans, lights, racks shakes at house in delhi after tremors jolts

இந்த வீடியோக்களை பலரும் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றன. டெல்லியில் வசிக்கும் மக்கள் நிலநடுக்கம் குறித்த தங்களின் அனுபவங்களையும், அவர்கள் கண்ட காட்சிகளையும் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛அனைவரும் பத்திரமாக இருப்பதாக நம்புகிறோம். நிலநடுக்கத்தின்போது அனைவரும் கட்டங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வர வேண்டும். மேலும் நாம் பயப்பட வேண்டாம். அதேபோல் லிப்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணை அழைக்கவும்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+