விஜய் திவாஸ்..கார்கில் போர் வெற்றி தினம் - பாகிஸ்தான் வீரர்களை துவம்சம் செய்த இந்தியா ராணுவம்
கார்கில் போர் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிரை துச்சமென மதித்து பாகிஸ்தான் ராணுவ வீரர்களை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு வெற்றியை நாட்டு பரிசளித்தனர் நம் நாட்டு ராணுவ வீரர்கள்.
டெல்லி: கார்கில் போர் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நடுங்கும் குளிரில் நாட்டின் எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு வெற்றியை நாட்டுக்கு பரிசளித்தனர் நம் நாட்டு ராணுவ வீரர்கள். அந்த வீரர்களை நினைவு கூறும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 22வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
Recommended Video
இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்களிலேயே 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போர்தான் இன்று வரை மிகவும் தீவிரமான போர். கார்கில் யுத்தமானது 1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெற்றது. பாகிஸ்தானின் ஊடுருவல், இதனை நமது வீரர்கள் கண்டறிந்தது, பின்னர் யுத்தம் நடத்தியது என கார்கில் போர் 3 கட்டங்களைக் கொண்டது.
இந்த போருக்கு ஆபரேசன் விஜய் என்று பெயரிடப்பட்டது. இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் நிகழ்ந்த போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை துவம்சம் செய்து இந்தியா வென்றது. கார்கில் யுத்த காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த தேசமும் நமது ராணுவ வீரர்களின் பின்னால் அணிவகுத்து நின்றது.

நடுங்கும் குளிர்
இந்த போர் முழுவதும் கடுமையான பனி பொழிவு இருக்கும் பகுதியில் நடந்தது. இந்த பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக இருந்ததால் அந்த சவாலையும் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சந்தித்து போரை எதிர்கொண்டனர்.

மலை சிகரங்கள்
ஆப்ரேஷன் விஜய் வெற்றி பெற இந்திய விமானப்படை மிக முக்கியமாக உதவியது. 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முகாம்கள், மற்றும் முஜாகிதீனின் ஊடுறுவலை கண்காணித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் அளித்தது.

கார்கில் போர்
இந்திய விமானப்படை உதவியுடன், டைகர் மலை பகுதியை ஜூலை மாதம் இந்தியா கைப்பற்றியது. இதனை அடுத்த வரிசையாக இந்தியா அடுத்தடுத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளைக் கைப்பற்றியது. ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் கார்கில் பகுதியில் அனைத்து இடங்களையும் இந்தியா கைப்பற்றி வெற்றியை நோக்கி முன்னேறியது.

வெற்றி பிரகடனம்
பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி எல்லா இடங்களையும் இந்தியா மொத்தமாக கைப்பற்றியது. பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த பின்னர் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வீரர்களுக்கு விருதுகள்
கார்கில் யுத்தத்தில் நாம் 527 மாவீரர்களை இழந்து நம் நிலப்பகுதிகளை மீட்டெடுத்தோம். 1,363 ராணுவ வீரர்கள் இந்த யுத்தத்தில் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 700 பேர் கொல்லப்பட்டனர். தமிழகத்தின் மேஜர் சரவணன் உள்ளிட்ட யுத்தத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டனர்.

விஜய் திவாஸ்
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்காகவும், போரில் பங்கேற்ற வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் கார்கில் வெற்றி தினம் விஜய் திவாஸ் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிரை துச்சமென மதித்து போரிட்டு உயிர்நீத்த அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications