நான் ராஜபுத்திரன்..மணீஷ் சிசோடியா ட்வீட்டுக்கு காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கண்டனம்
டெல்லி: நான் ஒரு ராஜபுத்திரன்; என் தலையை நானே வெட்டிக் கொள்வேனே தவிர ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என பாஜகவுக்கு ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா எச்சரிக்கை விடுத்தது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
டெல்லி துணை முதல்வர் மணீ சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேச மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக கூறி இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்னவே மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை கைது செய்யக் கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். மேலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: நான் ஒரு ராஜபுத்திரன்; மகாராஜா ராணா பிரதாப்சிங் வம்சத்தைச் சேர்ந்தவர். நானே என் தலையை வெட்டிக் கொள்வேனே தவிர ஒரு போதும் தலைவணங்கி நிற்க (பாஜக முன்பாக) மாட்டேன் என கூறியிருந்தார். அதாவது ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் இணைந்துவிட்டால் தம் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என பாஜகவினர் பேரம் பேசுவதாக மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டி இருந்தார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருந்து வருகிறது; அதனால்தான் ஆம் ஆத்மியை குறிவைத்து பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது அக்கட்சித் தலைவர்களின் பொதுவான குற்றச்சாட்டு.
தற்போது மணீஷ் சிசோடியாவின் இந்த ட்விட்டர் பதிவும் சர்ச்சையாகிவிட்டது. நான் ஒரு ராஜபுத்திரன் என குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருப்பது ஜாதிய மனோபாவத்தின் வெளிப்பாடு என காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குநரும் பாஜக ஆதரவாளருமான விவேக் அக்னிகோத்ரி கொந்தளித்துள்ளார்.
இது தொடர்பாக விவேக் அக்னிகோத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இது என்ன ஜாதியவாதம்? ஒருவேளை ராஜபுத்திரனாக இல்லாமல் இருந்தால் தலைகுனிந்து நிற்பாரா? டெல்லியில் இருக்கும் பிராமணர்கள், யாதவர்கள், குஜ்ஜார்கள், ஜாட்கள், சீக்கியர்கள் என அனைவரும் தலைகுனிவார்களா? முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் பற்றி என்ன நினைக்கிறார்? இவ்வாறு அக்னி கோத்ரி கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications