குடியரசு துணைத் தலைவர் தேர்தல்..முதல் நபராக வாக்களித்த பிரதமர் மோடி!
டெல்லி: நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் ஆகஸ்ட் 6ம் தேதியான இன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

வேட்பாளர்கள் யார்?
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர் போட்டியிடுகிறார்.. அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

தேர்தல் நடைபெறும் முறை
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த 790 உறுப்பினர்கள் வாக்களிப்பர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால் எந்தக் கட்சியின் சின்னமும் இடம்பெறாது. அந்த வாக்குச்சீட்டில் இரு பகுதிகள் இருக்கும். அதில் ஒரு பகுதியில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும். மற்றொரு பகுதியில் யாரைத் தேர்வு செய்ய விருப்பமோ, அவர்களை வரிசைப்படுத்தி எண்களைக் குறிப்பிட வேண்டும்.

வாக்குப்பதிவு தொடக்கம்
குடியரசு துணைத் தலைவருக்கான வாக்குப்பதிவு 10 மணிக்கு தொடங்கிய நிலையில், முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். இதனைத்தொடர் பாஜக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதேபோல் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் எம்பி-யுமான மன்மோகன் சிங் வாக்களித்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை நேரம் இருப்பதால், பெரும்பாலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி-க்களை தவிர்த்து, மற்ற கட்சிகளைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது முடிவுகள்?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பி-க்களில் 388 எம்பி-க்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். இன்று காலை 5 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை மாலையே நடத்தப்பட்டு அறிவிக்கப்படும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு துணைத் தலைவர் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications