பதவியேற்பு கோப்பில்.. பிள்ளையார் சுழி போட்டு கையெழுத்து போட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட, தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து அவர் இன்று பதவியேற்றார். பதவியேற்பு கோப்பில் பிள்ளையார் சுழி போட்டு பின்னர் கையெழுத்திட்டிருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நலக்குறைவு மற்றும், மருத்துவ காரணங்களுக்காக திடீரென கடந்த ஜூலை 21ம் தேதி ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி.சுதர்சன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் பலர் பங்கேற்றிருந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான கோப்பில் பிள்ளையார் சுழி போட்ட பின்னர் ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பாஜகவினரால் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
வழக்கமாக பாஜகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள், கடவுளின் பெயரால் பதவியேற்றுக்கொள்கின்றனர். இதில் சில முற்போக்கு தலைவர்கள் உண்மை மற்றும் சத்தியத்தின் பெயரால் பதவியேற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில், ராதாகிருஷ்ணனும் கடவுளின் பெயரால் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.
இந்துக்களின் பாரம்பரியப்படி, பிள்ளையார் சுழி போட்டு ஒரு விஷயத்தை தொடங்குவதன் மூலம், அந்த விஷயம் சிறப்பானதாக நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எனவே இதன்படித்தான் ராதாகிருஷ்ணனும் பிள்ளையார் சுழி போட்டு கையெழுத்திட்டிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications