டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் பிரம்மோஸ் வேண்டும்! அதற்கு சார் தம் சாலையை விரிவாக்க வேண்டும்! மத்திய அரசு வாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரகாண்டில் சார் தம் நெடுஞ்சாலையை விரிவாக்க வேண்டும், அப்போதுதான் எல்லைக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை கொண்டு செல்ல முடியும் என்று சார் தம் சாலை வழக்கில் மத்திய அரசு வாதம் வைத்துள்ளது.

உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், நேபாளம் இடையே உத்தரகாண்டில் உள்ள உத்ராஞ்சல் பகுதியில் மிகப்பெரிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை மத்திய அரசு கையில் எடுத்தது. 2016ல் சார் தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கங்கோத்ரி, கேதார்நாத், யமுனாஹோத்ரி, பத்ரிநாத் ஆகிய புனிதலங்களை இணைக்கும் வகையில் 899 கிமீ தூரத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக சிட்டிசன் ஆப் கிரீன் என்ற என்ஜிஓ அமைப்பு ஒன்று 2018ல் வழக்கு தொடுத்தது.

அண்ணாமலை வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது.. முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ ஆவேசம் அண்ணாமலை வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது.. முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ ஆவேசம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், இந்த பகுதியில் மரங்களை வெட்டுவது இயற்கை ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இது சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் கேதார்நாத், பத்ரிநாத்தில் பனி உருகி வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என்று வழக்கு தொடுத்தது. இதை பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உயர் மட்ட குழுக்களை அமைத்தது. இங்கு சாலைகளை 12 மீட்டருக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த உயர் மட்ட கமிட்டியின் 21 உறுப்பினர்கள் சார் தம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

ரவி சோப்ரா

ரவி சோப்ரா

ஆனால் கமிட்டியின் தலைவர் ரவி சோப்ரா ஆகியோர் அடங்கிய குழு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரண்டு ரிப்போர்ட் அளிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த சார் தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. 5.5 மீ வரை மட்டுமே இங்கு சாலையை விரிவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

2020ல் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தற்போது மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், இங்கு சாலைகளை 7 மீட்டருக்கு அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு வாதம் வைத்துள்ளது. நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்று இருந்தனர். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாதம்

வாதம்

இந்த வழக்கில் வாதம் வைத்த மத்திய அரசு, இந்த திட்டம் புனித தலங்களுக்கு செல்வதற்காக மட்டும் கொண்டு வரப்பட்டது கிடையாது. இந்தியாவின் பாதுகாப்பை கருதியும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. எப்போதுமே பாதுகாப்பை மனதில் வைத்தே திட்டம் கொண்டு வரப்பட்டது. எல்லையில் சீனா அத்துமீறி வருகிறது. விரைவில் படைகளை கொண்டு செல்ல பெரிய சாலை தேவை.

பிரம்மோஸ்

பிரம்மோஸ்

சீனாவை கட்டுப்படுத்த நமக்கு பெரிய சாலை தேவை. அதேபோல் பிரம்மோஸ் ஏவுகணைகளை உரிய நேரத்தில் எல்லைக்கு கொண்டு செல்ல இப்போது இருக்கும் சாலை போதாது. இதற்கு பெரிய சாலை தேவை. பாதுகாப்பு கருதியே இந்த சாலையை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். நாட்டின் பாதுகாப்பிற்கு இது முக்கியம் என்று மத்திய அரசு கூறியது.

என்ஜிஓ தரப்பு

என்ஜிஓ தரப்பு

இதற்கு பதில் வாதம் வைத்த என்ஜிஓ தரப்பு, இந்த சாலை திட்டம் ராணுவத்திற்காக செய்யப்படவில்லை. அதிக அளவு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது. 2016லேயே சீனாவுடன் மோதல் இல்லாத போதே இந்த சாலை திட்டத்தை கொண்டு வந்துவிட்டனர் என்று வாதம் வைத்தனர். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள்.

Recommended Video

    China ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.. India கொடுத்த பதில்
    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    இயற்கையை காக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதா? அல்லது பாதுகாப்பை காரணம் காட்டி இயற்கையை அழிப்பதா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று குறிப்பிட்டனர். இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்துள்ளது. வழக்கில் அடுத்த அமர்வில் தீர்ப்பு அளிக்கப்பட்டு என்று கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

    English summary
    Want to take BrahMos to the border, Saya Union Government on Char Dham road case in Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X