Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவின் 2 எம்பிக்களுக்கு இடம்.. வக்பு மசோதாவை ஆராய நாடாளுமன்ற கூட்டு குழு அமைப்பு! ஃபுல் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் திமுகவின் 2 எம்பிக்கள் உள்பட 31 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது அந்த நாட்டுக்கு சென்ற இஸ்லாமியர்களின் சொத்துகளை பாதுகாக்க வக்பு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் வக்பு வாரியங்களுக்கு 7.80 லட்சத்துக்கும் அதிக அசையா சொத்துகள், 9.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி ஆகும்.

Waqf bill waqf bill amendment Lok Sabha Parliament

இந்த வக்பு வாரியம் செயல்படுவதற்கு என்று தனி சட்டம் உள்ளது. இந்த சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களை மத்திய பாஜக அரசு செய்துள்ளது. இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நேற்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தாக்கல் செய்தார்.

அதில் வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெறலாம். ஒவ்வொரு வாரியத்திலும் 2 பெண்கள் இடம்பெறலாம். வாரிய சொத்துகள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வக்பு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதுதவிர வக்பு வாரியத்தின் அதிகாரம் என்பது சுருக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட நிலம் என்பது வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்று உண்மை தன்மையை சரிபார்க்காமல் உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா மூலம் வக்பு வாரிய நிலங்களை பாஜக பறிக்க முயற்சிக்கிறது என ‛இந்தியா' கூட்டணி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சிகளின் இந்த ஆட்சேபத்தால் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா என்பது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கூறினார். மேலும் நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறவில்லை.

இந்நிலையில் தான் இன்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ சார்பில் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம்பெறும் எம்பிக்களின் பெயரை அறிவித்தார். அதன்படி நாடாளுமன்ற கூட்டு குழுவில் லோக்சபாவின் 21 எம்பிக்கள், ராஜ்யசபாவின் 10 எம்பிக்கள் என 31 பேர் இடம்பெறுகின்றனர். இதில் திமுக சார்பில் லோக்சபா எம்பி ஆ ராசா, ராஜ்யசபா சார்பில் எம்எம் அப்துல்லா ஆகியோர் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் பாஜக சார்பில் லோக்சபா எம்பிக்களான ஜெகதாம்பிகா பால், நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அபராஜித் சாரங்கி, சஞ்சய் ஜெய்ஸ்வால், தலிப் சாய்கியா, அபிஜித் கங்கோபாத்யா, டிகே அருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகோய், இம்ரான் மசூத், முகமது ஜாவித், சமாஜ்வாதி கட்சியின் மவுலான மொஹிபுல்லா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீகிருஷ்ணதேவ ராயலு, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தில்லேஷ்வர் காமைத், சிவசேனா உத்தவ் அணியின் அரவிந்த் சாவந்த், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியின் சுரேஷ் கோபிநாத், சிவசேனாவின் நரேஷ் கன்பத் மஸ்கி, லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்) அருண் பாரதி, ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் அசாதுதீன் ஓவைசி என 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிந்துரையின் ஆய்வறிக்கை என்பது அடுத்து நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டு குழு தனது அறிக்கையை அளிக்கும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரைகளை தொடர்ந்து அடுத்து மீண்டும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும். இந்த மசோதா என்பது கூட்டு குழுவின் பரிந்துரைகளை ஏற்று திருத்தம் செய்யப்பட்டாதாக இருக்கலாம். இல்லாவிட்டால் திருத்தம் செய்யப்படாமல் கூட இருக்கலாம்.

மேலும் இந்த குழுவின் கூட்டத்தில் குறைந்தபட்சம் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் குழுவில் குறைந்தபட்சம் 10 முதல் 11 எம்பிக்கள் இருந்து விவாதிக்கப்படும் பரிந்துரைகள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+