டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 மாநில தேர்தலில் பாஜக தோற்றது ஏன்? மோடி சொல்லும் காரணத்தை பாருங்க!

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக எங்கு சறுக்கியது என்று ஆராய வேண்டும், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக எங்கு சறுக்கியது என்று ஆராய வேண்டும், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

4.5 வருட ஆட்சியில் முதல்முறை அவர் இப்படி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் பேட்டி அளித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.

 We are discussing what was lacking in 5 state election says PM MODI

ஏஎன்ஐ செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு பிரதமர் மோடி அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதில், 2018 மிக நல்ல வருடம். தேர்தல்களில் பாஜக நன்றாக செயல்பட்டது. ஆனாலும் தேர்தல்களில் பாஜகவிற்கு பெரிய கவனம் கிடையாது. ஏழைகளுக்கு பாஜக அரசு உதவி உள்ளது.

5 லட்சம் ரூபாய் வரை வழங்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் பல கோடி மக்கள் நலன் பெறுகிறார்கள். அவர்களுக்கு மருத்துவம் கிடைக்கிறது. இதைவிட வேறு எனக்கு என்ன மகிழ்ச்சி வேண்டும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவிற்கு மத்திய அரசு காரணமா? மோடி விளக்கம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவிற்கு மத்திய அரசு காரணமா? மோடி விளக்கம்

தெலுங்கானா, மிசோராமில் மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை. சட்டீஸ்கரில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றது. ஆனால் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நிலைமை அப்படி இல்லை.

அங்கு தொங்கு சட்டசபை உருவானது. 15 வருட ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவியது. இதை பாஜக ஆராயும். எங்கு சறுக்கியது என்று ஆராய வேண்டும், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

English summary
PM MODI to ANI on loss in 5 states: Telangana and Mizoram, nobody gave BJP any chance. In Chhattisgarh a clear mandate was given, BJP lost. But in 2 states there was a hung assembly. Secondly,15 years of anti-incumbency was being fought by our people.We are discussing what was lacking
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X