டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்கள் திராவிடர் பழங்குடிகளான பங்கா வழித்தோன்றல்கள்.. திரிணாமுல் எம்.பி. சேகர் ராய் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: நாங்கள் திராவிடர் பழங்குடிகளான பங்கா வழித்தோன்றல்கள்.. எங்கள் மாநிலத்தின் பெயரை பங்களா என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும் என்று ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் அதிரடியாக வாதிட்டார்.

ராஜ்யசபாவில் சுகேந்து சேகர் ராய் பேசியதாவது:

We are Dravidians, says TMC MP Sukhendu Sekhar Ray

இந்தியா முழுவதும் நாகர் இனம்தான் வாழ்ந்தனர். அவர்கள் பேசிய மொழி தமிழ். இதை அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். அம்பேத்கரின் இந்த கருத்துகளை ஏற்பதாக மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவும் கூறியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் கிமு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர் பழங்குடிகளான பங்கா இனத்தினர் குடியேறினர். அதனால்தான் பங்கா இன மக்கள் வாழும் எங்கள் மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்ய கோருகிறோம்.

இதற்காக மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் தராமல் இருக்கிறது. எங்கள் மாநிலத்தின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும்.

இவ்வாறு சுகேந்து சேகர் ராய் பேசினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழங்க பதிலடியாக ஜெய் பங்களா என சுகேந்து சேகர் ராய் முழக்கமிட்டார்.

English summary
Trinamool Congress MP Sukhendu Sekhar Ray said that, the word Bangla or the territory called Bangla is believed to have been derived from Banga, a Dravidian tribe that settled in the region 1000 BCE," in rayasabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X