சீண்டிய தீவிரவாதிகளை.. வேட்டையாட உதவப்போகும் அமெரிக்கா, இஸ்ரேல்.. இந்தியாவிற்கு புது பவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கும் தேவையான உதவிகளை செய்ய போவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உறுதி அளித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சவுத் பிளாக் அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனைகளை மேற்கொண்டனர். இஸ்ரேலிய தூதர் ருவென் அசார், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை பற்றி பேசுகையில்.. இது மிக முக்கியமான தருணம். ஐஸ் உடைந்தது போன்ற முக்கியமான தருணம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. பல முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தோம்.

இங்கு நடந்த பயங்கர தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம்; இது மிக முக்கியமான தருணம். நிச்சயமாக, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகிய இரண்டிலும் முக்கிய விஷயங்களை நாங்கள் விவாதித்தோம். சிறந்த ஒத்துழைப்பு வழங்கபோகிறோம் , நாங்கள் சிறந்த பங்காளிகள், என்று கூறினார்.

We are with India in deleting the terrorism in the region says Israel USA

அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், இங்கே தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இந்தியாவுடன் உடன் நிற்போம். இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கும் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியா உடன் நாங்கள் நிற்கிறோம், என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மீது நடவடிக்கை

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம். பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்த வாய்ப்புகள் உள்ளன. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என் கவுண்டர் செய்யலாம். அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம்.

கடற்படையை பாகிஸ்தான் அருகே கொண்டு சென்று அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அதேபோல் ஏவுகணை தாக்குதல், விமான தாக்குதல்களை நடத்த முடியும்.

ராஜாங்க ரீதியாக பாகிஸ்தானை ஏற்கனவே இந்தியா அடிக்க தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் - இந்தியா இடையிலான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியான அட்டாரி பார்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழியை பயன்படுத்தி முறையான ஒப்புதல்களுடன் சென்றவர்கள் 01 மே 2025 க்கு முன் அந்த வழியாக திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+