டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'வைரஸ் போரில்' இந்தியா சீக்கிரமே வெல்லும்.. இந்தியாவுக்காக எந்த உதவியும் செய்வோம்.. சீனா

Google Oneindia Tamil News

டெல்லி: கோவிட் -19 என சொல்லப்படும் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அளித்த ஆதரவுக்கு சீனா நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவ முன்வந்துள்ளது.

Recommended Video

    கொரோனாவை கட்டுபடுத்த இந்தியாவுக்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3,200 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வுஹான் நகரத்திற்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் பிற அவசர மருத்துவ உபகரணங்கள் அடங்கிய சுமார் 15 டன் மருத்துவ உதவிகளை இந்தியா அனுப்பியது. அத்துடன் சீனாவுக்கு கடினமான காலத்தில் இந்தியா நிறைய உதவிகள் செய்தது.

    இதற்கு நன்றி தெரிவித்துள்ள சீனா, கோவிட் -19 என சொல்லப்படும் கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் இந்தியா சீக்கிரமே வெல்லும் என்றும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவவும் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.

    கொரோனா பாதித்தவருக்கு 2 எச்ஐவி மருந்து.. கேரளாவில் நடந்த சோதனை வெற்றி.. உடனே குணமான அதிசயம்! கொரோனா பாதித்தவருக்கு 2 எச்ஐவி மருந்து.. கேரளாவில் நடந்த சோதனை வெற்றி.. உடனே குணமான அதிசயம்!

    நன்கொடைகள் அளிப்பு

    நன்கொடைகள் அளிப்பு

    டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங், வெளியிட்டுள்ள அறிக்கையில் "சீன நிறுவனங்கள் இந்தியாவுக்கு நன்கொடைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவுக்கு என்ன தேவை என்றாலும் எங்களால் முடிந்த வகையில் உதவி நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம்.

    இந்திய மக்கள் ஆதரவு

    இந்திய மக்கள் ஆதரவு

    சீனாவும் இந்தியாவும் தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைப் பேணி வருவதோடு, கடினமான காலங்களில் தொற்றுநோயைச் சமாளிப்பதில் ஒருவருக்கொருவர் ஆதரவையும் அளித்துள்ளன. இந்தியத் தரப்பு சீனாவுக்கு மருத்துவப் பொருட்களை வழங்கியுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான சீனாவின் போராட்டத்தை இந்திய மக்கள் பல்வேறு வழிகளில் ஆதரித்துள்ளனர். அதற்காக நாங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்.

    இந்தியா வெல்லும்

    இந்தியா வெல்லும்

    இந்திய மக்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் சீக்கிரமே வென்று விடுவார்கள் என்று நம்புகிறோம். மற்ற நாடுகளுடன் இணைந்து சீனா, கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடும். ஜி20 மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். இதன் மூலம் உலகில் உள்ள மனித சமூகத்தின் நலம் மற்றும் ஆரோக்கியத்தை உயர்த்தப் பாடுபடுவோம்" என்றார்

     உதவும் சீனா

    உதவும் சீனா

    இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோன வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில். சீனா, சமீபத்தில் இந்தியா உட்பட பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீடியோ கான்ஃபரென்சிங் மூலம், கொரோனா பரவலை எப்படி சமாளிப்பது என்று தனது அனுபவத்தை வீடியோ கான்ஃபரென்சிங் முறையில் பகிர்ந்து கொண்டது. தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளுக்கு மருத்துவ உதவிகளையும் மருந்து உதவிகளையும் சீனா தற்போது அளித்து வருகிறது.

    English summary
    china says thanks to india , its support in the fight against Covid-19 and offered to help contain the pandemic in the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X