பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு வருமா? போர் பதற்றத்துக்கு நடுவே இந்தியன் ஆயில் குட்நியூஸ்
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. பலரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரும் என்று பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வரும் நிலையில் மக்களே பயப்பட வேண்டாம். போதுமான அளவுக்கு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளது என்று இந்தியன் ஆயில் விளக்கம் அளித்துள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாகிஸ்தானில் ஏவுகணை வீசி 9 பயங்கரவாத முகாம்களை நம் நாடு அழித்தது. இதற்கு நேற்று முதல் பாகிஸ்தான் நம் நாட்டின் மீது ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களை நம் முப்படைகள் முறியடித்து பாகிஸ்தானின் மூக்கை உடைத்துள்ளன.

ஆனால் பாகிஸ்தான் அடங்கவில்லை. இதனால் அதிரடியாக பாகிஸ்தான் மீது நேற்று இரவு நம் நாடு தாக்குதல் நடத்தியது. இப்போது நம் நாட்டுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் என்பது ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநில கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரிப்பதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்ச உணர்வில் ஏராளமான மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து அதிகளவில் பெட்ரோல், டீசலை வாங்கி வரும் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். நம் நாட்டுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது என்று இந்தியன் ஆயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் போதுமான அளவுக்கு எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்களின் சேவைகள் வழக்கம்போல் எந்த பாதிப்பும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
எங்களின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல், டீசல், எல்பிஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தேவையின்றி கூட்டம் கூடாமல் சிறப்பான சேவைகளை வழங்க எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். இந்த செயல் என்பது தடையின்றி எரிபொருள் விநியோகத்தை எங்களால் உங்களுக்கு வழங்க உதவும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications