6 லட்சம் வீரர்களே இருக்காங்க.. பாகிஸ்தானால் இந்தியா முன் நிற்க முடியாது.. புலம்பிய பாக். அதிகாரி
டெல்லி: இந்தியா போன்ற வலிமை வாய்ந்த ராணுவம் முன்பாக 6 லட்சம் வீரர்களை மட்டுமே கொண்ட பாகிஸ்தானால் நிற்க முடியாது என்று பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷ் மசூத் அக்தர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் பதற்றத்தை குறைக்க முடியாது என்று கூறிய அவர், இந்தியா அடுத்ததாக 4 பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் 4வது நாளாக மோதல் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக எளிதாக முறியடித்துள்ளது. இதனிடையே நேற்றிரவு நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தானின் 3 ராணுவ தளங்கள் மீது இந்தியா மிகப்பெரிய அட்டாக்கை நடத்தி இருக்கிறது.
லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் உள்ள நுர்கான், முரித் மற்றும் ரபிக் ஆகிய விமான தளங்களை இந்திய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கி இருக்கிறது. இதனை பாகிஸ்தான் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்திருக்கிறார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் டிவி விவாத நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் கூறுகையில், பாகிஸ்தானிடம் வெறும் 6 லட்சம் வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் இந்திய ராணுவத்தின் வலிமை 16 லட்சமாக உள்ளது. அதனால் எந்த வகையான போரிலும் பாகிஸ்தானை காப்பாற்ற முடியாது.
அதனால் பாகிஸ்தான் தலைவர்களின் பணி எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முடிவு எடுப்பதுதான். இப்போது நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு நம்மிடம் எந்த பதில் இல்லை. நமது சூழலும் தொடர்ந்து மோசமாகி கொண்டே செல்கிறது. அமெரிக்கா தலையிடாத வரை இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை குறைக்க முடியாது.
पाकिस्तानी सेना के रिटायर्ड अधिकारी बता रहे हैं इंडिया की 16 लाख की सेना के आगे हमारे मात्र 6 लाख सैनिक ज्यादा टिक नहीं पायेंगे।
— Ravi Bhadoria (@ravibhadoria) May 10, 2025
अब तो अमेरिका और चीन ही युद्ध रोककर हमें बचा सकते हैं इंडिया से। pic.twitter.com/RW83rMmrU2
அடுத்தடுத்து 4 மிகப்பெரிய தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது. அதனால் பாகிஸ்தான் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கவில்லை என்றால், நம் சூழல் மேலும் மோசமான நிலைக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இந்திய சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications