மணிப்பூர்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயார்- எதிர்க்கட்சிகள் மீது பியூஷ் கோயல் சாடல்!
டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர கோரி எதிர்க்கட்சிகள் இன்றும் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கின. ஆனால் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என ராஜ்யசபா சபை முன்னவர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மணிப்பூரில் 3 மாதங்களாக தொடர் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை கடந்த 7 நாட்களாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கினர். இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா கூடின. அப்போது இரு சபைகளிலும் பிரதமர் மோடி சபைக்கு வந்து விளக்கம் தர வேண்டும் என எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனையடுத்து லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
முன்னதாக ராஜ்யசபாவில் பேசிய சபை முன்னவர் பியூஷ் கோயல், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக இன்று பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தங்களுக்கான சுதந்திரத்தை தவறுதலாக பயன்படுத்துகின்றனர். மணிப்பூர் பிரச்சனை குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகத்தான் இருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை 9 நாட்களாக வீணடித்துவிட்டனர் எதிர்க்கட்சி எம்பிக்கள் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications